பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

133

அமைத்தது. ஆனால், பேரவை தோற்று முன்னும் பின்னும் படித்த இந்தியர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்த இந்தக் கோரிக்கை நீண்ட நாள் நிறைவேறாமலே இருந்தது.

1861லேயே இப்பணிகளுக்கு ஆறிலொரு பங்கு இந்தியர் அமர்த்தப்படுவரென்று ஆட்சியாளர் உறுதி கூறியிருந்தனர். பேரவையின் வேண்டுகோளுக்கிணங்கி, உச்ச வயது 19லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது. ஆயினும், அவ்வாறு அவர்கள் செயலில் செய்யவில்லை. போதாக்குறைக்கு 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு ரட்டைத் தாழ்ப்பாள்', என்ற முறையில், 1894 ல் உசப் பணிகளில் முழுதும் வெள்ளையரே இருந்து தீர வேண்டுமென்று ஆட்சியாளர் விதி அமைக்க முற்பட்டனர். பேரவைக்கும் இந்திய மக்களுக்கும் இறுதிவரை மனத்தில் உறுத்திய செய்திகளில் ஒன்றாக இந்த நிற வேறுபாடு அமைந்தது. இதன் 'ஒருகுலத்துக்கு ஒரு நீதி' இந்தியர் தன் மதிப்பைப் புண்படுத்திற்று.

“சொந்த நாட்டிற் பிறர்க்கடி மைசெய்து வாழ்வதோ - உயிர்- மாள்வதோ!”

என்று மக்கள் முழக்கமிட்டார்கள்.

ஐந்தாவது தீர்மானம், மாநில விடுதலைக்காலம்வரை என்றும் ஒரு சிறிதும் கவனிக்கப்படாத் தீர்மானம். அதுவே மாநிலப் பாதுகாப்புச் செலவை அதாவது படைத்துறைச் செலவைக் குறைக்க வேண்டுமென்பது. செல்வம் கொழிக்கும் நாடுகளில் அத்துறையில் செலவாவதைவிட, வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடும் இந்தியாவில் மிகுதி விழுக்காடு செலவாவது இந்திய மக்களின் ஒரு பெருங்குறைபாடேயாகும்.

ஆண்டுதோறும் படைத்துறைச் செலவு பற்றிய பேச்சுக்கள் உரத்த குரலில் பேரவை மேடையை அதிர வைத்தன. ஆனால், இச்செலவு மிகுதிக்கு ஆட்சியாளரிடையேயுள்ள 1857 புரட்சியின் நினைவும் அச்சமுமே காரணம். படைத்துறை இந்திய மயமாக்கப் படவேண்டும் என்ற கூக்குரல் கவனிக்கப்படாததும், இது காரணமாகவே கிளர்ச்சி ஏற்பட்டால் இந்தியப் படைகளும் இந்தியப் பணித்தலைவரும் இந்தியர் பக்கம் சாயக் கூடும் என்று அயலாட்சி ஏகாதிபத்தியம் அஞ்சிற்று.