134
அப்பாத்துரையம் - 12
ஆறாவது தீர்மானம் நாட்டுத் தொழில்களைப் பற்றியது. காப்பு வரி அல்லது தீர்வைகளை ஏற்படுத்தி உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்று பேரவை கோரிற்று.
ஏழாம் தீர்மானம், புதிதாக வெல்லப்பட்ட வடபர்மாவை இந்தியாவுடன் சேர்த்தலாகாது என்றும், முடியுமானால் பர்மாவையே தனி நாடாகப் பிரிக்க வேண்டுமென்றும் வேண்டிற்று.
எட்டாம் தீர்மானம், தீர்மானங்களை மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டுமென்று கூறிற்று.
புதிய பிரச்சினைகள்
முதற் பேரவையின் மேற்காட்டிய தீர்மானங்களைப் போல ஆண்டுதோறும் பல தீர்மானங்கள் செய்யப்பட்டன. பல தீர்மானங்கள் பழைய தீர்மானங்களை மீட்டும் வற்புறுத்தின. ஆனால், அவ்வப்போது புதிய பிரச்சினைகளும் எழுந்தன. வரவரப் பொதுமக்களின் குரல் பேரவையில் புகுந்தது. வரவர மிகுதியான ஆர்வத்துடன் உறுப்பினர் வாதத்தில் கலந்து கொண்டனர். பேரவையின் அரசியல் நோக்க எல்லையின் விரிவை இவை காட்டுகின்றன.
இரண்டாவது பேரவையில் செய்யப்பட்ட தீர்மான மொன்று, நீதி நிருவாகத் துறைகளைப் பிரிக்க வேண்டுமென்றும், சான்றாளர் குழுவின் (July) முடிபுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றும் கோரிற்று. அத்துடன் விசாரணை இல்லாமல் எவரையும் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்து, அவர்களுக்கு விசாரணை கோரும் உரிமையைப் பேரவை வேண்டிற்று.
ல்
நீதி நிருவாகப் பிரிவினைத் தத்துவம் குடியாட்சி இயக்க வரலாற்றில் அமெரிக்கப் புரட்சிக் காலத்தில் தலைவர் ஜெஃவ்வர்ஸனால்' முதல் முதல் 18-ஆம் நூற்றாண்டி வற்புறுத்தப்பட்டு,19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜா ராம்மோகனராயரால் உரத்த குரலில் இந்தியாவின் கோரிக்கையாக்கப்பட்டிருந்தது. பேரவையில் எழுந்த முதல் உரிமைக் குரல் இதுவே.