பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136 |

அப்பாத்துரையம் - 12

தாழில் திட்டம் ஏதாவது அரசியலார் வகுக்கக்கூடாதா? அதற்காகப் பயிற்சி தரும் கல்வித் திட்டம் ஏதாவது வேண்டாவா?"- புத்தார்வம் ஊட்டும் இக்குரலை எழுப்பியவர் உண்மையிலேயே ஒரு தொழிலாளர் என்பதை அறியும்போது, நம் மகிழ்ச்சி பெரிதாகிறது.இப்பிரச்சினையைத் தோற்றுவித்தவர் தஞ்சையிலுள்ள மூக்கன் ஆசாரியார் ஆவர்.

நான்காம் ஆண்டுப் பேரவை, முதன்முதலாக உப்பு வரியைக் கண்டித்தது. மீண்டும் மீண்டும் அரசியலார் நினைவுக்குக் கொண்டுவரப்பட்டும் கவனிக்கப்படாத இக்குறைபாடே. 1930- ஆம் ஆண்டு காந்தியடிகளின் உப்புப் போராட்டத்துக்குத் தூண்டு கோலாயிற்று. இந்துப் பிரதிநிதிகள் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகள் ஒருமுகப்பட்டு எதிர்க்கும் எந்தத் தீர்மானமும் பேரவையால் மேற்கொள்ளப்படக் கூடாதென்பது நான்காம் பேரவையின் தீர்மானங்களுள் ஒன்று. இந்து முஸ்லீம் ஒற்றுமை மனப்பான்மை விடுதலை இயக்கத்தின் போக்குக்கு எவ்வளவு உயிர்நிலையானது என்பதைப் பேரவை அன்றே உணர்ந்திருந்தது என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது.

கு

கோகலே, திலகர் முதலிய ஒப்பற்ற தேசத் தலைவர்கள் பெயர்களை நாம் ஐந்தாம் பேரவையிலேயே கேட்கிறோம். பழைய பேரவையின் கருவிலேயே புதிய தலைமையின் முளை தளிர்க்கத் தொடங்குகிறது!

பிரிட்டிஷ் பொதுமக்களிடமும் உலக மக்களிடமும் இந்தியா பற்றியும் பேரவை இயக்கம் பற்றியும் ஆட்சியாளரும் எ திரிகளும் செய்யும் தவறான பிரசாரங்களுக்கெதிராக உண்மைத் தகவல்கள் தந்து சரியான பிரசாரம் செய்வதன் அவசியத்தை ஆறாவது பேரவை உணர்ந்து, அதற்காக ஒரு பிரசாரக் குழுவை அமைத்தது. உமேஷ் சந்திர பானர்ஜியும் சுரேந்திரநாத பானர்ஜியும் அதில் உறுப்பினராயிருந்தனர். ஸர் வில்லியம் வெட்டர்பர்ன் இங்கிலாந்து சென்ற பின் அவரும் தனுடன் இருந்து அருந் தொண்டாற்றினார். ஏழாவது பேரவை, இக்குழுவின் செலவுக்காக ஆண்டுதோறும் ரூ. 40,000 உதவித் தொகை அளிக்க இணங்கிற்று.