இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
137
இந்தியா முழுவதும் ஒரேவகை நிலவரி முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆறாவது பேரவையும், வெளிநாட்டுப் பொருள்களை விலக்கி நாட்டுப் பொருள்களை (சுதேசியை)யே யாவரும் வாங்க வேண்டுமென்று ஏழாவது பேரவையும் தீர்மானித்தன.
பத்தாவது பேரவை, குழந்தைப் பருவத்திலுள்ள இந்திய ஆலைத் தொழில்கள் மீது, பிரிட்டனின் ஆலை முதலாளிகளின் தூண்டுதலின் மேல் அரசியலார் வரி விதிப்பதைக் கண்டித்தது. அடுத்த ஆண்டு, தொடர் ஊர்திகளில் மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளின் துயர்களை ஆற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், தென்னாப்பிரிக்க இந்தியர் துயர் களைய நடவடிக்கை எடுக்கும் படியும் பேரவை அரசியலாரை வேண்டிற்று.
பன்னிரண்டாவது பேரவை, பம்பாய், சென்னை ஆட்சித் தலைவர் செயலவைகளில் இந்தியருக்கும் இடம் தர வேண்டும் என்று வாதாடிற்று.
1897க்குள் அதாவது, 13-ஆம் பேரவை கூடுமுன், 1857லிருந்து பொதுமக்களிடையே குமுறிக் கொண்டிருந்த புரட்சிக்கனல், பேரவைக்குள்ளும் ஒளிவீசத் தொடங்கிற்று. பிற்காலத்தீவிரக் கட்சியின் தலைவரும் லோகமானியர் என்று பொது மக்களால் போற்றப்பட்டவருமான பாலகங்காதர திலகர் மீது இவ்வாண்டு அரசத்துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டு, அவர் தண்டனை யடைந்தார். மற்றும் உடன் பிறந்தாராகிய 'நாட்’ துணைவர்கள் அவருடன் நாடு கடத்தப்பட்டார்கள். பேரவை இவற்றை யெல்லாம் உரத்த குரலிலாற் கண்டித்தது.
கர்ஸான் பெருமகனாரின் புதுத் தாக்குதல்:
1898இல் கர்ஸான் பெருமகனார் இந்திய ஆட்சித் தலைவரானார். ஆதிக்க வெறியரான அவர் ஆட்சிக்குள் பேரவை முழுதும் போராட்டத்துக்குக் கச்சை வரிந்து கட்டும் அவையாயிற்று, அவ்வாண்டுப் பேரவை அவரை வரவேற்றதுடன், காட்டிலாக்காச் சட்டங்களின் கடுமையையும் கண்டித்தது.அடுத்த ஆண்டிலேயே கர்ஸான் பெருமகனாரின் அடக்குமுறைச் சட்டங்கள் எழுந்தன. பேரவை வீறிட்டெழுந்தது. அவ்வாண்டு மேற்கு, நடு இந்தியாவில் எழுந்த பஞ்ச நிலைகளைப் பேரவை