இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
139
இங்ஙனம் படித்த மக்களிடையே தோன்றிய பேரவைக் காலப் புதிய இந்தியா, கட்டபொம்மன், திப்பு, சிவாஜி, ஜான்ஸி ராணி ஆகியவர்கள் வீரக் குருதியின் புகழொளியைச் சில காலம் மறந்து, பிரிட்டனிடம் நல்லெண்ணம் கொண்டு மன்றாடி வாதாடி வந்ததைக் காண்கிறோம். ஆனால், இருபதாண்டுக்குள் இறந்தவர் குருதியின் ஆற்றல், பேரவை மதில்களைச் சுற்றிலும் வந்து மோதுவதைக் காண்கிறோம்.பாஞ்சாலத்திலிருந்து லாலா லஜபதியும், மராட்டிரத்திலிருந்து திலகரும் அதன் உயிர்ச்சின்னங்களாய் மதில் கடந்து வந்து முழங்கினர். மிதவாதத் தலைமைப் பீடத்திலமர்ந்த கிழச் சிங்கத்தின் பிடரி மயிர்கள் அடங்கிய அவ்வீர நினைவுகளால் துடிப்பதைக் காண்கிறோம். இந்தச் சூழ்நிலையில் வங்கப்பிரிவினை ஒரு பொறியாயிற்று. அது வங்கப் புரட்சியை வங்கத்தில் மட்டுமன்றி மாநிலமெங்கும் பரப்பிற்று.புரட்சி வேறு, பேரவை வேறு என்ற நிலை மாறிற்று. புரட்சி பேரவைக்குள் புகுந்தது. வங்கப் புரட்சியுடன் பேரவை சார்ந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் உண்மையில் தொடங்குகிற தென்னலாம்.