இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
141
மாநிலமெங்கும் பேரவை இயக்கம் அரசியல் இயக்கமாகவே பரந்து வந்துள்ளது. ஆனால், வங்கத்தில் அது 19- ஆம் நூற்றாண்டிலிருந்தே அரசியல் இயக்கமாக மட்டுமன்றி, மொழி, இலக்கியம், கலை, சமயம், பண்பாடு ஆகிய எல்லாத்துறைகளும் அளாவிய முழுநிறை தேசிய மறுமலர்ச்சி யக்கமாய் அமைந்து விட்டது. மாநில எல்லை கடந்து உலக
லக்கிய வானிலே வங்க நங்கையாரான தோருதத்தா, வங்கக்குயில் திருமதி சரோஜினி தேவியார், உலகக் கவிஞர் இரவீந்திரர் ஆகியவர் திகழ்கின்றனர். வங்க இலக்கியமும் கவிச்சக்கரவர்த்தி இரவீந்திரர், புனைகதைப் பேரரசர் பங்கிம் சந்திரர், நாடக மன்னர் துவிஜேந்திரலால்ராய் ஆகியவர்கள் தாண்டுகளின் மூலம் உலக இலக்கிய எல்லையில் நின்று மிளிர்கின்றது.
வங்கப் புரட்சி: சுதேசி இயக்கம்
பேரவையின் புரட்சிகரமான மாறுதலுக்கு உடனடிக் காரணம் வங்கப் புரட்சியேயாகும். கிளைவ், ஹேஸ்டிங்ஸ் ஆகியவர்களின் அடாச் செயல்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கும், டல்ஹௌலிப் பெருமகனாரின் அட்டூழியங்கள் மாநிலப் பெரும்புயலுக்கும் வழி வகுத்தது போல, வங்கப் புரட்சிக்குக் கர்ஸான் பெருமகனாரின் நிறவெறி பிடித்த ஆணவப் போக்கே காரணமாயிற்று. தேசிய இயக்கத்தின் முன்னணியில் நின்ற வங்கத்தின் வாழ்வை எப்படியாவது குறைக்க எண்ணி, அவர் 1904ல் அதனை இரு மாகாணங்களாக்கத் திட்டமிட்டார். இது 1905 அக்டோபர், 16-ஆந் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனைப் பேரவை எதிர்த்தது. வங்கமெங்கும் மாநிலத்தின் அங்கம்போல விதிர்விதிர்த்தெழுந்தது. வங்கத்தின் குரல் இந்தியாவெங்கும் எதிரொலித்தது. வங்கத்தின் தேசியத் தூதுவராக இச்சமயம் விபினசந்திரபாலரும், சுரேந்திரநாத பானர்ஜியும் விளங்கினர். சுரேந்திரநாதர் பேரவைப்பணிக்காகவே பதவி பட்டங்களைத் துறந்து நின்ற தியாகி, அவர் இந்தியாவின் அந்நாளைய தலைசிறந்த சொல்லின் செல்வர். சங்கரர், இராமானுசர், மாத்துவர், சைதன்னியர் ஆகிய பழங்காலச் சமயாசாரியர்களைப் போலவே, அவர் மாநில முழுவதும் திக்கு விஜயம் செய்து, ஒரே இயக்க மூலம் அதற்குப் புதிய சத்தியும்
உயர்