இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
143
என்பது பொருள்). தமிழகத்தின் 'வங்க'ப் புரட்சி வங்க நாட்டுப் புரட்சியைக் கடந்து, ஏகாதிபத்தியப் பேரெதிர்ப்புப் போராட்ட மாயிற்று.
தமிழக ‘வங்க’ப் புரட்சி
வங்கம் மாநிலப் பேரியக்கத்துக்குத் தந்த தூண்டுதல் மிகப் பெரிது. ஆனால், இயக்கம் மாநில எல்லைக்குச் சென்ற பின், வங்கம் தற்காலிகமாக அதன் தலைமை நிலையிலிருந்து நழுவிற்று. 1905-ஆம் ஆண்டுப் பேரவையில் வங்கப் பிரிவினைக்கு எதிர்த் தாக்குதலாக, இளவரசர் வருகையை ஏற்க மறுக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, வங்கப் புரட்சித் தலைவர் சுரேந்திரநாதரே அதை எதிர்த்து நிறைவேற வொட்டாமற் செய்தார். வங்கப் புரட்சிக்கிடையே அவர் படிப்படியாக மிதவாதிகளின் பக்கமாகச் சாய்ந்தார். வங்கம் தற்காலிகமாக மிதவாதிகளின் கோட்டையாகி வந்தது. ஆனால், இதற்குள் தீவிர இயக்கத் தலைமையைத் தமிழகமும், மராட்டியமும், பாஞ்சாலமும் ஏற்றன. வங்கத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகம் நின்று வீறுடன் வழிகாட்டிற்று. தமிழகத்தின் தனிப்பெருந் தலைவரான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனா தலைமையில் அது 'வெள்ளையனே வெளியே போ!' என்ற குரலை முதன் முதலாக எழுப்பிற்று. 1907ல் வீரத் தமிழர் எழுப்பிய இந்தக் குரலே, 1942ல் மீண்டும் பேரவைத் தலைவரால் உயிர்ப்பிக்கப்பட்டு, 1947ல் வெள்ளையரை வெளியேற்றிற்று என்பதைக் காணலாம்.
'வெள்ளையனே, வெளியே போ!' என்ற வீரத்தமிழர் குரல், வீரமட்டும் உடையதன்று. அது தமிழ் மரபில் வழுவாமல் 'வெள்ளையனே, உன் கப்பல்களுடன் நீ வெளியே போ! யாமே எம் கடல் ஆண்டு வாழ்வோம்' என்று கூறுவதாயுமடைந்தது. வாணிகப் பண்பிலும் தொழில் பண்பிலும் வளர்ந்த பண்டைத் தமிழக மரபு, தேசிய இயக்கத்தையும் வாணிகத் தொழில் மரபில் வளர்க்கத் தலைப்பட்டது. சுதேசிக் கப்பற்கழகமும், சுதேசித் தரும சங்க நெசவுசாலையும், சுதேசிப் பண்டக சாலையும் அமைத்துத் தூத்துக்குடியிலிருந்து வ.உ.சிதம்பரனார் போர் தொடக்கினார். போரின் ஒரு கூறாக இந்தியாவிலேயே முதன்