இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
145
எவனோ ஆத்திரக்காரன் சுட்டு வீழ்த்திவிட்டான். அக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பல நண்பர்களுக்காக வ.உ.சி. போராடினார். ஆனால், அதனை அரசியற் கொலையாகக் கொண்டு, அவரே அதற்கும் அது போன்ற அரசியலைக் கவிழ்க்கும் செயல்களுக்கும் மூலகாரணர் என்று குற்றஞ்சாட்டி, அரசியலார் அவரை மூன்று நாடு கடத்தல் தண்டனைகளுக்கு ஆளாக்கினர்.
வ.உ.சிதம்பரனார்
1908 முதல் கப்பலோட் கடுஞ்சிறையில் செக்கிழுத்தல், கசையடி முதலிய உயிர்வதை முறைகளால் சொல்லொணாத் துயர்களுக்காளானார். சிறை விடுதலை பெற்று நெடுங்காலம் கழித்து வந்த பின்னும் அவர் அரசியலாராலும் அடிமைப் புத்தியுள்ள பிற்காலப் பேரவை மிதவாதியர் பலராலும் ஒதுக்கடிக்கப்பட்டு, வறுமைக்கும் உட்பகைகளுக்கும் ஆளானார். ஆனால், அவர் இறுதி வரை நிமிர்ந்து நின்று இந்தியாவின் முழு நிறை விடுதலைக் கனவு கண்டு, அதற்கு அயராது உழைத்து வந்தார்.
சிதம்பரனார்
கப்பலோட்டிய தமிழரான வ.உ. தமிழகத்தின் முடி சூடா மன்னராயும் தொழிலாளரியக்கத்தின் முதன் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராயும் அவர் வீறுடன் நின்று நிலவுகிறார். அவருக்குப்பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல் துறையில் அவருக்கு ஒப்பான செயற்கரிய பெருஞ்செயல்கள் செய்த பெரியாராகத் தலைவர் பெருந்தகை போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தி யடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையும் அளாவியதாதலால், இவர்களுடன் ஒப்பிடத் தக்க தலைமை என்று கூற முடியாது. வ.உ.சி. கண்ட கப்பற்கனவு காந்தியடிகள் கனவுகளையும், ஓரளவு தலைவர் பெருந்தகை கனவுகளையும் தாண்டித் தமிழரின் பண்டை வாணிக மரபைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.