இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
147
என்ற அவர் கனவு அரசியல் விடுதலையை மட்டுமன்றிச் சமுதாய விடுதலையையும் கோரி நிற்கின்றது. தனி ஒருவனுக்கு உணவிலா நிலை தவிர்க்கும் பொருளாதார விடுதலையையும் அது உள்ளடக்கிப் பெருமிதமுடையதாய் இலங்குகின்றது.
வை தவிர, “காதல், காதல், காதல்- காதல் போயின் சாதல், சாதல், சாதல்” என்ற தமிழன் காதற்கனவும்; 'வீடு தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி” என்ற தமிழன் கல்விக் கனவும் கண்டவர், தமிழகத்தின் ஒப்புயர்வற்ற தேசியக்கவிஞர் பாரதியார். இந்திய மாநில முழுவதிலும் விடுதலைப் பேரியக்கக் காலத்தில் தேசியத்தில் தோய்ந்த கவி மலர்களை நாம் காணக்கூடுமாயினும், தேசியத்தில் மலர்ந்து கனிந்த இனிய தேசியக் கனியான மற்றொரு கவிஞரை நாம் காண முடியாது.
புயல் எதிர் புயல் பருவம்
பாரதியார் போன்ற கவிஞர், அரவிந்தர் போன்ற கவிதையறவோர், திலகர் போன்ற நாட்டுத் தலைவர், பரலி சு.நெல்லையப்பர், கிருஷ்ணசாமி சர்மா, ஹரிசர்வோத்தமராவ் முதலிய ஒப்பற்ற நாட்டுத் தொண்டர் ஆகியவர்கள் நட்பால் தமிழகப் பெருந்தலைவர் வ.உ.சிதம்பரனாரின் ஒப்புயர்வற்ற புகழ் மணம் பெறுகிறது.
வங்கப் புரட்சியினால் மாநிலத்தைத் தட்டி எழுப்ப முடிந்தது.ஆனால், வங்கம் அதனைத் தலைமை வகித்து நடத்தத் தவறிற்று. தமிழகக் கப்பற் புரட்சி மாநிலத்துக்கு வீறு தந்து, ஒற்றுமையையும் ஒரு தொலைக்குறிக்கோளையும் தந்து. ஆனால், தமிழகம் தந்த தொலைக்குறிக்கோள், அன்று மாநிலத்தின் காட்சியாற்றலுக்கு எட்டா கடுந்தொலைக் குறிக்கோளாகவும், அஃது அளித்த ஒற்றுமை காலங்கடந்ததாகவுமே அமைந்தன. மாநிலம் விரைவில் வங்கத்தில் தலைமையை இழந்தது போலவே தமிழகத்தின் தலைமையையும் இழந்து, சில காலம் ஒற்றுமை தவறத் தொடங்கிற்று. 1907லிருந்து 1916 வரை பேரவை பல புறப்பகை அகப்பகைகளால் அச்சுறுத்தப்பட்டு, வலிமை கெட்டு இயங்கிற்று. அதன் பின்னர்த் தற்காலிகமாக ஏற்பட்ட ஒற்றுமையும் நீடித்து நிற்க முடியவில்லை. ஆனால், 1918க்குள்