பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

அப்பாத்துரையம் - 12

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்து தேசிய இயக்கத்தின் தலைமை ஏற்ற மகாத்துமா காந்தி, ஒற்றுமை கெட்டு நின்ற மாநிலத்துக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியும் அளித்தார்.

வங்கப் புரட்சி, தமிழகக் கப்பற் புரட்சி ஆகியவற்றுக்கும் காந்தி ஊழிக்கும் இடைப்பட்ட பருவத்தையே நாம் ‘புயல் எதிர் புயல் பருவம்' என்கிறோம். இது சூரத்துப் பேரவையுடன் தொடங்கிற்று.

சூரத்துப் பேரவைக் கூட்டம்

1904லிருந்து 1906 வரை பேரவைத் தீவிரக் கட்சி, திலகர், லாலா லஜபதிராய், வ.உ.சிதம்பரனார் ஆகிய மூவர் தலைமையில் வளர்ந்து கொண்டே வந்தது. 1906இல் கல்கத்தாவில் நடந்த பேரவையிலேயே அவர்கள் ஆதிக்கம் பெற்றுவிடக் கூடும் என்ற அச்சம் பரவியிருந்தது. மிதவாதிகள் அதற்காகவே தங்கள் நம்பிக்கையையும், தீவிரவாதிகளின் மதிப்பையும் ஒருங்கே பெற்ற முதுபெரும்பெரியாரான தாதாபாய் நௌரோஜியைப் பிரிட்டனிலிருந்து வரவழைத்துத் தலைமை தாங்க வைத்திருந்தனர்.

1907 டிஸம்பர் 26இல் சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதிகளைத் தடுப்பதற்கென்றே பெருத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரவேற்புக் கழகத் தலைவராகத் திரிபுவனதாஸ் என். மால்வியும், தலைவராகடாக்டர் ராஷ்பிகாரி கோஷும் மிதவாதிகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதேச சமயம், தீவிரவாதிகளிடையேயும் திலகர் துணிகரமாகப் புரட்சிநடவடிக்கைகளில் இறங்கத் துடிதுடித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் சூரத்துப் பேரவையில் பெரு நெருக்கடி எதிர்பார்க்கப்பட்டது. பிரதிநிதிகளாய் வந்த 1600 பேர்களும், பார்வையாளராய்ச் சூழ்ந்திருந்த 5400 பேர்களும், பிற பொதுமக்களும், 'எந்த நேரம் என்ன நேருமோ!' என்ற திகிலுடன், பரபரப்புடனும், பேரவை நடவடிக்கைகளைக் கண் கொட்டாது கவனித்தவண்ணமிருந்தார்கள்.

தலைவர் பீடத்துக்கு ராஷ்பிகாரி கோஷைத் திவான் பகதூர் அம்பாலால் முன் மொழிந்ததே, “கூடாது! கூடாது!” என்ற குரல்கள் எழுந்தன. சுரேந்திரநாத பானர்ஜி பின் மொழிய