150
அப்பாத்துரையம் - 12
அத்துடன் வ.உ.சியைப் பின்பற்றித் திலகர் இவ்வாண்டு அரசியலாரால் ஆறு ஆண்டுக் காவல் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.மராட்டியச் சிங்கமும் தமிழகச் சிங்க ஏறும் இல்லாத சென்னைப் பேரவை, முற்றிலும் மிதவாதிகள் கும்பலாய் அமைந்ததில் வியப்பில்லை.
•
பேரவைப் பிரதிநிதிகளுக்குக் கொல்லங்கோடு மகாராஜா தேநீர் விருந்தளித்தார். இப்பேரவை செய்த முக்கியத் தீர்மானம் வங்கப் பிரிவினையை ஒழிக்க வேண்டுமென்று கோரியதேயாகும். அதனுடன் அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருந்த மிண்டோ- மார்லி சீர்திருத்தத்தின் தன்மை இன்னது என்று அறியாமலே இம்மிதவாதப் பேரவை அதை ஆர்வத்துடன் வரவேற்று மகிழ்ந்தது என்பதையும் அறிகிறோம்.
மிண்டோ- மார்லி சீர்திருத்தங்கள்
1907ல் வகுக்கப்பட்டு அடுத்த ஆண்டுகளில் வெளியிடப் பட்ட மிண்டோ- மார்லி சீர்திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பு முறை வளர்ச்சியிலும் தேசிய இயக்க வளர்ச்சியிலும் ஒரு முக்கியமான படிக்கட்டாய் அமைந்துள்ளது. அது முதன் முதலாகச் சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உறுப்பினர்களாக்கிற்று. இம்முறையில் அதைப் பொறுப்பாட்சியின் முதற்படி என்று கூறலாம். ஆனால், அதே சமயம் இந்தியத் தேசிய இயக்கத்தின் வளர்ச்சியில் அது ஒரு முட்டுக்கட்டையையும் புதிதாக வளர்க்கத் தொடங்கிற்று. இதுவே, 'வகுப்புவாதிகள், தேசியவாதிகள்' என்ற வேறுபாடு ஆகும். இந்திய தேசியம் உருவாகி வரும்போது இங்ஙனம் தேசிய இயக்கங்களுக்குக் குந்தகமான ஒரு விசித்திர நிலையும் ஏற்பட்டது. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் முஸ்லிம்களுக்கும் வேறு சில பிற்பட்ட வகுப்பினருக்கும் இனங்களுக்கும் பிரதிநிதித்துவமும் தனித்தேர்தல் தொகுதிகளும் வழங்கிற்று.
புதிய பிளவுகள்: முஸ்லிம் சங்கம், இந்துப் பேரவை
தனிப்
பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சியிலும் 1857 பெரும்புயலிலும் இந்து முஸ்லிம் என்ற மத வேறுபாடோ; தமிழர், தெலுங்கர், வங்காளி, பீகாரி என்ற மொழி வேறுபாடோ; செல்வர், ஏழை