பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

151

என்ற வேறு எத்தகைய வேறுபாடோ இருந்ததாக நாம் அறியவில்லை. மக்கள் சார்பு, அயலார் சார்பு என்ற தெளிவான இரு கூடாரங்களே இருந்தன. வங்கப் புரட்சிக்குப் பின் இந்நிலை மாறிவிட்டது. தீவிரவாதி, மிதவாதி என்ற புதுப் பிரிவினை எழுந்தாலும், இது கிட்டத்தட்ட முந்திய அயலார் சார்பு, மக்கள் சார்பு போன்ற பிரிவினையே தவிர, பேரவையின் போக்கிலும், தேசியத்தின் போக்கிலும் தீவிரவாதமே வலுத்து வளர முடியும். ஏனென்றால், மிதவாதம் என்பது தீவிரவாதத்துக்கான வளர்ச்சிப்படியே. இதனை அறிந்த அயலாட்சி ஏகாதிபத்தியம் பிரிவினைக் கோடுகளைக் காண நாட்டம் கொண்டிருந்தது. அப்பிரிவினைகளும் கர்ஸான் ஆட்சிக் காலத்திலேயே எழலாயின.

பேரவையில் தொடக்கத்திலிருந்தே முஸ்லிம்கள் மற்றச் சமயத்தவரோடு ஒன்றுபட்டு முன்னேறி வந்தார்கள். ஆயினும், தேசியத்திலிருந்த இவ்வொற்றுமை, தேச வாழ்விலிருந்த உயர்வு தாழ்வு வேறுபாட்டைச் சரி செய்யத் தயங்கிற்று. தொடக்கத்தில் அரசியலைவிடச் சமூகச் சீர்திருத்தத்தில் முனைந்திருந்த பேரவை முதல்வர்கள், பின்பு முற்றிலும் சமூகவகையில் கருத்திழந்து போயிருந்தார்கள். ஆண்டுதோறும் பேரவை அரசியல் மாநாட்டுடனே சமூகமாநாடுகள் நடந்து வந்தனவாயினும், அவை நல்லெண்ணத் தீர்மானங்களையே நிறைவேற்றின.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகலே போன்ற தலைவர்கள் சமூகப்பணி, கல்வி ஆகியவற்றில் கருத்துச் செலுத்தி வந்தார்கள். ஆனால், இவை முற்பட்ட சமூகங்களுக்கே முழுப்பயன் தந்தன; பிற்பட்ட சமூகங்களைத் தனிப்படக் கவனிக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் பேரவையுடன் முழுதும் ஒத்துழைத்தாலும், தங்கள் தனி நலன்களைப் பேண 1906லேயே ஒரு தனி நிலையம் அமைத்துக் கொண்டார்கள். அரசியல் நிலையமாக நிறுவப்பட்ட இந்த முஸ்லிம் சங்கம்' போலவே, வேறு தனித்தனி முஸ்லிம் குழுவினரும் கொள்கை யாளரும் தனித்தனி நிலையங்களை அமைத்துக்கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் இச்சங்கங்கள் சில இந்துக்களையும் தனி அவை அமைக்கத் தூண்டின. 1906லேயே இந்துக்கள் பேரவை (இந்து மகாசபை) ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. பேரவைக்கு