பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

153

பிரதிநிதிகளிடையே அது இந்து முஸ்லிம் வேற்றுமையை விளைவிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும் பல பேரவைப் பிரதிநிதிகள் முஸ்லிம் சங்கப் பிரதிநிதிகளாயும் இருந்தார்கள். தவிர, ஆண்டுதோறும் பேரவை மாநாடும், முஸ்லிம் சங்க மாநாடும் ஒரே நகரிலேயே, அடிக்கடி ஒரே பந்தலிலேயே நடைபெற்று வந்ததால், இரு சமூக இயக்கங்களும் தோழமை பெற்ற இயக்கங்களாகவே நீண்ட காலம் இருந்து வந்தன.பல முக்கியச் செய்திகளிலும் அரசியல் குறிக்கோள்களிலும் பேரவையின் தீர்மானங்களை ஒட்டியே முஸ்லிம் சங்கத்தின் தீர்மானங்களும் இந்து பேரவையின் தீர்மானங்களும் இருந்தன.

தலைநகர் மாற்றம்

1910ல் ஏழாம் எட்வர்டு அரசர் காலமானார். அதன் பின்பு வங்க மக்கள் கிளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாயிருந்த வங்கப் பிரிவினை ஒழிக்கப்பட்டது. ஆயினும், வங்கத் தலைநகரில் இருந்த இந்திய ஆட்சித் தலைமை இப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் முதன்முதலாகத் தில்லிக்கு மாற்றப்பட்டது. தில்லி, இந்துக்களால் மகாபாரத காலத்தில் பாண்டவர் புதுத் தலைநகராயிருந்த தென்று கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் ராஜபுத்திரர் ஆட்சிக் காலத்தில் அதைத் தலைநகராகக் கொண்டு பல பேரரசுகள் ஆண்டிருந்தன. எனினும், அது பேரரசுத் தலைமை யிடமாகப் பெயர் பெற்றது பெரிதும் முஸ்லிம் ஆட்சியிலேயே. எனவே, தில்லியை இந்தியாவின் தலைநகரமாக்கியது முஸ்லிம் களின் மனப்பான்மைக்கு விட்டுக் கொடுக்கும் ஒரு சலுகைதான் என்று சிலர் கருதினர். வடமேற்கு எல்லைப்புறமே இந்தியப் பாதுகாப்புக்கு முக்கியமானதால், தில்லி தலைநகராயமைந்தது இயல்பே என்றும் ஆட்சியாளர் சார்பில் கூறப்பட்டது.

ஆயினும், தில்லி தலைநகரானது ஆங்கிலப் பேரரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மாறுதல் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை பிரிட்டிஷ் தலைமையிடமாய் இருக்கும்போதுதான் வங்கமும் வடநாடும் நோக்கி, பிரிட்டிஷார் கை பரவ முடிந்தது. கல்கத்தா தலைநகரான பின் அது பர்மாவிலும், கிழக்காசி யாவிலும், நேபாளத்திலும், திபெத்திலும், ஆப்கானிஸ்தானத் திலும், மேற்காசியிவிலும் கை நீட்டியிருந்தது. கல்கத்தாவி