பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

அப்பாத்துரையம் - 12

லிருந்து தில்லிக்குத் தலைமை இடம் மாறிய அன்றே பிரிட்டிஷ் கிழக்கு ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சிப்படிக்கும் வெற்றிக்கும் ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. அதன் தோல்வி களுக்கும், பேரரசுத் தளர்ச்சிக்கும், இறுதி வீழ்ச்சிக்கும் அது முதற்படியாயிற்று. அதன்பின் அது பர்மாவில் முன்னேற முடியவில்லை; நேபாளத்துடன் சமரசம்செய்துகொண்டது. ஆப்கானிஸ்தானத்தில் அதன்பின் அது தன் பழைய பேராசையை விட்டு விட்டு, நேசத் தொடர்பை விரும்பி, அதை ஆர்வத்துடன் வரவேற்கத் தொடங்கிற்று.

பேரரசு மரபுகளின் எரிசாம்பல் பிரிட்டிஷ் பேரரசைப் பார்த்துப் பேய்ச் சிரிப்புச் சிரித்திருக்க வேண்டும்! கடைசி முகலாயப் பேரரசின் ஆவி அங்கே அவர்களின் புதிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டு எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும். ஷ்! 'பிரித்தாண்டு வெற்றி கண்ட பேரரசே. நீ இனிப் பிரித்தாண்டு தோல்வி காண்பாய்' என்று அவை கொக்கரித்திருக்கக் கூடும்!

மீது

1911ல் பேரவைக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகளின் செயலால் இந்திய ஆட்சி முதல்வர் ஹார்டிஞ்சு மீ வெடிகுண்டு எறியப்பட்டிருந்தது. அவ்வாண்டுப் பேரவை இம்முறையையும் இச்செயலையும் கண்டித்தது. அத்துடன் மாகாணத் தன்னாட்சி வழங்க வேண்டும் என்ற ஆட்சியாளரின் நன்முயற்சியையும் அது வரவேற்றது.

இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்ச்சி

பேரவையின் இந்து முஸ்லிம் சமரஸ முயற்சிகளால் ஏற்பட்ட பலன்கள் பல. முஸ்லிம் சங்கமும் பேரவையைப் பின்பற்றிப் பொறுப்பாட்சியே கோரி நின்றது இதனுள் ஒன்று. விரைவில் இந்துப் பேரவையும் அரசியல் துறையில் இதே குறிக்கோளை ஏற்றது. இந்திய முஸ்லிம்கள் தங்கள் சலுகைகளுக்காக இந்தியாவின் அரசியல் முற்போக்குக்கு முட்டுக் கட்டையாயிருக்கும் குற்றத்துக்கு ஆளாகக் கூடாது என்று பேரவையின் முஸ்லிம் பிரதிநிதிகள் எச்சரித்து வந்தார்கள்.1913ல் பேரவைத் தலைவராய் அமர்ந்திருந்த முஸ்லிம் பெரியார் நாவபு சையது முகம்மது பகதூர், “உண்மையான முஸ்லிம் மற்ற