பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

155

மதத்தினரை எதிர்க்கமாட்டார்”, என்றும், “மற்ற எல்லாச் சமயத்தினருடனும் ஒத்துழைத்துத் தேசப் பணியாற்றுவதில் முஸ்லிம்கள் மற்ற எச்சமயத்தினருக்கும் பின்னடைய மாட்டார்கள்.” என்றும், “அதுவே இஸ்லாம் அவர்களுக்குப் போதிக்கும் அறிவுரை” என்றும் வற்புறுத்திப் பேசினார்.

1914- ஆம் ஆண்டு இறுதியில் முதல் உலகப் போர் தொடங்கிற்று. ஆட்சியாளர்மீது பற்றுதல் உறுதி தெரிவிக்கும் உணர்ச்சி அலை பொங்கியிருந்தது. இது மிதவாதத்துக்குப் பேராதரவாயிருந்தது. தென்னாப்பிரிக்காவில் நிறவாதத்தை எதிர்த்துப் போராடிய காந்தியடிகளும்

கோகலேயும்

இக்காலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசியலைப்பற்றிய மட்டில் மிதவாதிகளாகவே இருந்தார்கள் என்பதும், திலகரும், வ.உ. சிதம்பரனாரும் ஆட்சியாளர் தீவிர அடக்குமுறைக்கு ஆளாகிப் பொது மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கவை. இந்நிலைமைகளில் விளைவை நாம் 1915ல் பம்பாயில் கூடிய பேரவையில் காண்கிறோம். அதன் தலைவர் சர் சத்தியேந்திர பிரஸன்ன சின்ஹா ஆவர். இவர் மிதவாதிகளில் தலைசிறந்த மிதவாதி. பிற்காலங்களில் இந்தியரிடையே முதல் முதலாகப் பிரிட்டனின் பெருமகனார் என்ற நன்மதிப்புப் பட்டம் பெற்றவரும், முதல் முதலாக மாகாண ஆட்சி முதல்வர் பதவிக்கு வந்தவரும் இவரே ஆவர். சூரத்துப் பேரவைக்குப் பின் இவர் தலைமையில் நடந்த இந்தப் பேரவை ஒன்றிலேயே அரசியலாரிடம் பற்றுறுதித் தீர்மானம் செய்யப்பட்டது. ஆயினும், இவர் தீவிரவாதிகளையும் பேரவையின் தலைமைக் குழுவில் சேர்க்க மனமுவந்து முன் வந்ததால், மீண்டும் சூரத்துக்குப் பின் பேரவையில் ஒற்றுமை ஏற்பட்டது. விடுதலை பெற்ற திலகர், இவ்வன்பழைப்பை ஏற்றுத் தீர்மானக் குழுவில் உறுப்பினராய் இடம் பெற்றார்.

புதிய தன்னாட்சி இயக்கங்கள்: புதிய தலைமை

1915ல் கோகலே, மேத்தா ஆகிய பழந்தலைவர் காலஞ்சென்றனர்.1916ல் இலட்சுமணபுரியில் பேரவை கூடிற்று. சூரத்துப் பேரவைக்குப் பின் திலகர் கலந்து கொண்ட முதற் பேரவை இதுவே. இவ்வாண்டில் திலகருக்குப் பக்க ஆதரவாகச் சென்னையில் பிரமஞான சங்கத் தலைவர் அன்னி பெஸண்டு