156) ||-
அப்பாத்துரையம் - 12
அம்மையார் தொண்டாற்ற முன் வந்தார். ஏப்பிரல் 23-ஆந் தேதி திலகர் பூனாவில் ‘தன்னரசுக்குழாம் ஒன்றை நிறுவினார். திலகரைவிடத் திருமதி அன்னி பெஸண்டுக்கு அனைத்திந் தியாவில் அன்று செல்வாக்கு மிகுதியாயிருந்தது. தவிர, இன்னும் சிறையிலிருந்து வெளிவாராதிருந்த வ.உ.சி.யின் அனைத்திந்தியச் செல்வாக்கும் அவருக்குத் துணை தந்தது. ஆகவே, அவர் செப்டெம்பர் 12-ஆந் தேதி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஓர் அனைத்திந்தியத் தன்னாட்சிக் குழாத்தை 2 நிறுவினார். இதற்கான அவர் முயற்சியும் கிளர்ச்சியும் 1913லிருந்தே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
1916 பேரவையின் தலைசிறந்த வெற்றி, பேரவைக்கும் முஸ்லிம் சங்கத்துக்கும் அன்னி பெஸண்டு அம்மையாரின் ஒப்பற்ற செயல் தலைமை மூலம் ஏற்பட்ட புதிய ஒற்றுமைதான். இரு பேரவைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொதுத் திட்டத்தை அவர் உருவாக்கி, அதைப் பேரவையிலும் முஸ்லிம் சங்கத்திலும் ஒருங்கே நிறைவேற்றுவித்தார். இது 'பேரவை- முஸ்லிம் சங்க ஒப்பந்தத் திட்டம்3 என்று வரலாற்றில் புகழ் பெற்றுள்ளது. இதன்படி தன்னாட்சி கோரிப் பேரவை வலியுறுத்திய கொள்கைகளை முஸ்லிம் சங்கம் ஏற்றுக் கொண்டது. முஸ்லிம் சங்கமும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் வகுப்புத் தீர்மானத்தை விட்டுவிட இணங்கினாலன்றி, அதை எதிர்ப்பதில்லை என்று பேரவை முஸ்லிம் சங்கத்துக்கு உறுதியளித்தது.
பேரவை- சங்க ஒப்பந்தம் இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்ச்சியில் ஓர் உயர்ந்த கொடிக்கம்பம். அதன் வழியில் இந்தியா இறுதி வரை நின்றிருந்தால், இந்தியர் பெற்ற விடுதலையுடன் பிரிவினையும் நேர்ந்திருக்க வேண்டுவ தில்லை. ஆனால், வரலாற்றின் கடிகாரமுள்ளைச் சரியான சமயத்தில் சரியானபடி திருப்பி வைக்காவிட்டால், அதன் போக்கை யாரால் மீண்டும் தொடக்கத்திலிருந்து திருப்ப முடியும்?
1917இல் கல்கத்தாப் பேரவைக்குத் திருமதி அன்னி பெஸண்டே தலைவராயிருந்தார். அவர் 'காமன்வெல்து' என்ற வார இதழுக்கும் 'நியூ இந்தியா' என்ற நாளிதழுக்கும்