இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
ய
157
ஆசிரியராயிருந்தார்.1916லிருந்தே அவர் இந்தியாவின் மாபெரும் பேரவை இயக்கத் தலைவரானார். அவரது நியூ இந்தியாப் பத்திரிகைக்கு 1916இல் அரசியலாரால் ரூ.2000 பிணையம் கோரப்பட்டிருந்தது. அவர் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக வலுத்துவிடக் கூடாதென்பதற்காக,ஆட்சியாளர் அவரைப்பம்பாய் மாகாணம் நடுமாகாணங்களுக்குச் செல்லக் கூடாதென்று தடை விதித்திருந்தனர்.1917ல் உதகமண்டலத்திலிருந்து வெளியே போகக் கூடாதென்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பேரவையில்
பேரவை- சங்க ஒப்பந்தத்தின்பின் தீவிரவாதிகள் கை வலுத்தது. முஸ்லிம் சங்கம் தீவிரவாதிகளின் பக்கமே நின்று தன்னாட்சி இயக்கங்களிற் கலந்து கொண்டது. தீவிர முஸ்லிம் தலைவர்களான அலி துணைவர் (Ali Brothers) சிறைப்பட்டனர். 1917 பேரவை அவர்கள் விடுதலை கோரித் தீர்மானம் செய்தது.
1906லிருந்து நடைமுறையிலிருந்து வந்த பேரவையின் தேசியக் கொடி இப்போது புதிய தன்னரசுக் கொடியாக 1916ல் மாற்றப்பட்டது. மீண்டும் கொடிகள் 1921லும் 1931லும் மாற்றப்பட்டன. தன்னரசுக் கொடி பிரிட்டிஷ் பேரரசுக் கொடியினுள்ளேயே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றுகூடப் பேரவை நாடிய தன்னாட்சி. பேரரசுக்குட்பட்ட தன்னாட்சியே என்பதை இது நினைவூட்டுகிறது.
மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்
மிண்டோ-மார்லி சீர்திருத்தங்களுக்குப்பின் 1918 ஜூன் 18ல் வெளியிடப்பட்டமாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களே இந்திய அரசியலமைப்பின் அடுத்தபடி முன்னேற்றமாகும். இதில் மாகாணத் தன்னாட்சிக்கு ஒரு தனியிடம் தரப்பட்டிருந்தது. தேர்தல் உரிமை, மாகாணங்களில் சட்ட சபைக்கு மட்டுமன்றி, ஓரளவு மேலவைக்கும் தரப்பட்டிருந்தது. ஆனால், இச்சீர்திருத்தங்களில் இந்தியர் பொதுவாகவும், பேரவைத் தீவிரவாதிகள் சிறப்பாகவும் கண்டித்த பல கூறுகள் இருந்தன. முதலாவது, மாகாண ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் பொறுப்பில் ஒரு சில சில்லறைச் செய்திகளே விடப்பட்டிருந்தன. மீந்தவற்றை ஆட்சி முதல்வரே தம் ஆட்சித்