160 ||-
அப்பாத்துரையம் - 12
பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை அவ்வளவு! ஆனால், ரௌலத்துச் சட்டம் அப்பெரியார் நம்பிக்கையைக் கலைத்தது. அவர் அறப்போர் தொடங்கப் போவதாக ஆட்சியாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆன்ம ஞானிகளைப் பொருட்படுத்தியறியாத அரசாங்கம், அவரைப் புறக்கணித்து, அடக்குமுறைப் புயல் எழுப்பிற்று. குருதியாறுகள் ஓடின.காந்தியடிகள் முற்றிலும் தீவிரவாதியாய்த் திலகரைப் பின்பற்ற இது உதவிற்று. காந்தியடிகளின் புதுத் தலைமையில் தீவிரவாதிகள் இன்னும் வலிமை பெற்றார்கள்.
1919- ஆம் ஆண்டில் மிதவாதிகள் பேரவையை விட்டு வெளியேறித் தனி அவையும் கட்சியும் அமைத்துக் கொண்டார்கள். அது' அனைத்திந்திய பொதுநலக் கழகம்' என்ற பெயரால் அவ்வாண்டு முதல் நிலவிற்று.
தென்னிந்திய நேர்மைக் கட்சி: தொழிற்சங்க இயக்கம்
தென்னிந்தியாவில் இதற்கு முன்னிருந்தே 1916ல் அரசியலில் மிதவாதிகளாயிருந்து சமூகச் சீர்திருத்தத் தொண்டில் முன்னேறிச் செல்லும் ஆர்வமுடைய சில மக்கள் தலைவர்கள் பேரவைக்கு வெளியே ஒரு சங்கம் நிறுவியிருந்தார்கள். அதுவே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஆகும். இது தாழ்த்தப்பட்டவர் களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் தனி உரிமையும் தனிச்சலுகையும் கோரியதுடன், அவர்கள் சார்பில் தனித் தொகுதி, பணியமர்வு விழுக்காடும், கல்வியுரிமை விழுக்காடும் கோரிற்று. இஃது, எல்லா வகுப்பினருக்கும் சரிசம நேர்மை கோரியதால், 'நேர்மைக்கட்சி’2 என்றும், உரிமையில் பிற்பட்ட மிகப் பெரும்பாலான பிராமண ரல்லாத எல்லா வகுப்புகளின் பெயராலும் குரலெழுப்பிய தனால், 'பிராமணரல்லாதார் கட்சி' என்றும்பெயர் பெற்றது. பழைய இராமலிங்க வள்ளலாரின் சமூகச் சீர்திருத்த நோக்குடனும் மறைமலையடிகளாரின் மொழி உரிமைச் சீர்திருத்த நோக்குடனும் தென்னிந்தியாவில் இவ்வியக்கம் ஒன்றுபட்டு உழைத்தது.
காந்தியடிகள் தொடக்கத்திலிருந்தே நெசவுத் தொழிலாளர்- களுக்காகவும் சம்பரான் நீலித் தோட்டத் தொழிலாளர்களுக் காகவும் தம் அறப்போர் முறையை கையாண்டிருந்தார். தென்னாட்டில் திரு. சர்க்கரைச் செட்டியார், தோழர் சிங்கார