இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
161
வேலுச் செட்டியார், திரு.வி. கல்யாண சுந்தரனார் ஆகியவர்கள் முயற்சிகள் பழந்தலைவர் வ.உ.சி.யின் தொழிற் புரட்சியைத் தொடர்ந்து நடத்தத் தொழிற்சங்க இயக்கத்தைத் தொடங்கி யிருந்தன. இவை பேரவையுடன் இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் வளர்ந்து வந்தன.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் காலில் நீதிக்கட்சி பல பேரியக்கங்களாகப் பெருகி, மொழி, தொழிலாளர் போராட்டம், சமூக உரிமை, சமய சமூகச் சீர்திருத்தம் ஆகிய வற்றை மேற்கொண்டிருந்தது. இது ஒரு புறம் தென்னாட்டுத் தலைவர்களின் பெருமுயற்சியால் இந்தியப் பொது உடைமைக் கட்சி தோற்றுவதற்கு உதவிற்று. மறுபுறம் இது பேரவை இயக்கம். இதுவரை கவனிக்காதிருந்த இந்து முஸ்லீம் ஒற்றுமை, தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் ஆகிய இரண்டு சமூகப் பிரச்சினைகளிலும் காந்தியடிகள் கருத்துச் செலுத்தும்படி தூண்டிற்று.
1919ல் ஏற்பட்ட இச்சூழ்நிலைகளினிடையே லோகமானிய பாலகங்காதர திலகர் காலமானார். அவர் தீவிரவாத உரிமை மரபுக்கும் காந்தியடிகள் தலைவரானார். காந்தி ஊழி இது முதல் தொடங்குகிறது. அது முதலில் இந்தியாவின் அரசியல் வாழ்வையும் பின்பு அதன் முழுத் தேசியவாழ்வையும் முழுதும் மாற்றியமைத்துப் புதியதோர் இந்தியாவைத் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது.