பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

163

மாறிற்று. இந்தியாவைவிடப் பேரவை பெரிதாயிற்று. ஏனெனில், அது புதிய இந்தியாவைத் தோற்றுவித்தது! அதுபோலவே, பேரவையைவிடக் காந்தியடிகள் புகழ் பெரிதாயிற்று. ஏனெனில், அவர் புதியதொரு பேரவையைத் தோற்றுவித்தார்!

காந்தியடிகளின் புகழும், அப்புகழொளியிற் பட்டுப் புதிதாய் மலர்ந்த புதிய பேரவையும், புதிய இந்தியாவும் இந்திய எல்லை கடந்து, ஆசியாவின் மறுமலர்ச்கிக்குத் தூண்டுதல் தந்தன. இங்ஙனம் காந்தியடிகள் புகழ் புது உலக ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும் வழி காட்டிற்று. கீழ்த்திசை வானில் தோன்றி இந்தியாவையும் உலகையும் ஒளிதிகழச் செய்த இப்பேரொளியை இந்திய மக்கள் இக்காலக் கடவுட்பிறப்பு எனப் போற்றிப் பாராட்டியதில் வியப்பில்லை. ஏனெனில், அவர் பொது மக்களின் முதல்தரத் தலைவராயிருந்ததுடன், அத்தகைய பொதுமக்கள் தலைவருக்கும் ஒரு பெருந்தலைவராயிருந்தார். இந்தியாவின் முதற்பெருந்தலைவர்களாகிய பண்டித ஜவஹர்லால் நேருவும் தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸும் அவரையே தம் அரசியல் தந்தையார் என்று பாவித்திருந்தனர்.

காந்தியடிகளைச் சிலர் ஆன்மிகத் துறை சார்ந்த ஒரு முனிவர் என்றே கருதுவதுண்டு. வேறு சிலர், அவரை அரசியல்வாதிகளில் தலைசிறந்த முதல்வர் என்று கூறுவர். இரண்டு துறைகளிலும் அவர் பண்புகள் செயலாற்றின என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்தியாவுக்கும் பேரவைக்கும் அவர் ஆற்றிய தொண்டு மிகமிகப் பெரிது. அவற்றின் புகழொளியில், அதுவே மிகப்பெரும் பகுதியாகியுள்ளது. இதனை நோக்க, அவர் ஆன்மிகப் பெருமை சிறப்புடையதேயானாலும், அவர் அரசியற் புகழ் அதனினும் பெரிது என்னலாம். ஆயினும், அவர் வாழ்வில் அரசியல் கூறு எது? ஆன்மிகக் கூறு எது? என்றோ; பொதுவாழ்வுக் கூறு எது? தனி வாழ்வுக் கூறு எது? என்றோ பிரித்துணர முடியாது. அவருக்குச் சமயமே தேசியமாகவும், தேசியமே சமயமாகவும் அமைந்திருந்தது. தேசியப் பொதுவாழ்வே அவருக்குத் தனி வாழ்வாகவும், அவர் தனி வாழ்வு அதன் ஒரு பெருங்கூறாகவும் அமைந்துவிட்டன.

இந்தியாவின் தலைவர்களிடையே மாநிலத்தின் அறிவுத் திறத்துக்குரிய புகழை புகழை உலகறிய எடுத்துக்காட்டியவர்