164
அப்பாத்துரையம் - 12
விவேகானந்த அடிகள். இந்தியாவின் பண்டைப் புகழ்க் கனவுகளையும், தமிழகத்தின் முழுநிறைத் தேசியக் கனவுகளையும் இந்தியர் கண் முன் ஒரு வானவில்லாய் நின்று திகழச் செய்தவர் கப்பலோட்டிய தமிழராகிய வ.உ. சிதம்பரனார். இந்தியா ஒரு வல்லரசாக முடியும் என்பதை மேனாட்டினரும் கண்டு மலைக்க மெய்ப்பித்துக் காட்டியவர் தலைவர் பெருந்தகை போஸ். சீர்திருத்தக் கொடி ஏற்றி இந்தியாவின் பழைய மாசு மறுக்களை அகற்றிப் புதிய இந்தியாவுக்கு முதன்முதல் வழிகாட்டியவர் ராஜாராம் மோகனர். ஆனால், இத்தனை பேரின் புகழையும் ஒரே புகழாக்கி, இந்தியாவின் ஆன்மிகப் பெருமையை உலகறியச் செய்தவர் காந்தியடிகள். 'பெருஞ்செயற் பெரியார்' (மகாத்துமா) என்ற பெயரால் பொதுமக்களும் 'அடிகள்' என்ற சிறப்பு அடைமொழியால் திரு. வி. கலியாண சுந்தரனாரும் அவரைச் சிறப்பித்துள்ளனர்.
வாழ்வும் போர் முறையும்
இந்தியாவின் தேசிய வாழ்விலும் புகழிலும் நீண்டகாலம் பின்தங்கியிருந்த நாடு கூர்ச்சரமே. ஆனால், அது விரைந்து இந்திய வாழ்வைத் தன் வாழ்வு ஆக்கிக் கொண்டது. அதுவே, இந்தியத் தேசியத்தின் முழுநிறை மாணிக்கமாகிய காந்தியடி களையும் ஈன்றளித்தது. அவர் மேற்படிப்புக்குப் பிரிட்டன் சென்று திரும்பி வந்த பின் சில காலம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராய்த் தொண்டாற்றச் சென்றிருந்தார். தென்னாப் பிரிக்க இந்தியரின் உரிமைகளுக்காக அவர் அங்கே தொண் டாற்றிப் பெருவெற்றி கண்டார். அரசியலில் அவர் அறப்போர் முறையை முதல்முதல் கையாண்டது கடல் கடந்த அந்நாட்டிலேயே. அங்குள்ள இந்தியரில் தமிழரே மிகப் பெரும்பாலோர். காந்தியடிகள் அங்கே தமிழருடன் பழகியும் தமிழ்ப் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுத்தும் ஓரளவு தமிழில் பயிற்சி பெற்றிருந்தார். தமிழர் தலைசிறந்த நூலாகிய திருக்குறளிலும், விவிலிய நூலிலும் அவருக்கு ஈடுபாடு மிகுதி. இந்நூல்களும் இவற்றின் வழி ரஷ்யப் பெரியார் டால்ஸ்டாய் என்பார் ஒழுகிக் காட்டிய அறநெறியுமே காந்தியடிகளின் அறப்போர் நெறிக்குத் தூண்டுதல் தந்தன. பல தமிழ்ப் பெரியார்கள் அவர் முறைகளில் ஒத்துழைத்து அவர் புகழ் ஒளியில் பங்கு