168
ரௌலத்துச் சட்ட எதிர்ப்பு
அப்பாத்துரையம் - 12
ரௌலத்துச் சட்டப் பகர்ப்பு 1919 பிப்பிரவரியிலேயே மாநிலச் சட்ட சபைக்குக் கொண்டுவரப்பட்டது. அதை அரசியலார் பின் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று கோரியும், பின் வாங்காவிட்டால் அதை எதிர்த்து அறப்போர் தொடங்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தும் காந்தியடிகள் மாநில ஆட்சி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆட்சியாளர் அசையவில்லை. அதன்மீது ஏப்பிரல் 6 முதல் 13 வரை ரௌலத்துச் சட்ட எதிர்ப்பு வாரமாகக் கொண்ட ITL வேண்டுமென்று காந்தியடிகள் கட்டளை பிறப்பித்தார். கடைகளை ஏப்பிரல் 6ல் அடைத்துவிட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் தொடர்ந்து ஊர்வலங்கள் நடத்தினார்கள்.
தேசிய இயக்கத்திலிருந்து இது வரை பெரிதும் ஒதுங்கியிருந்த பாஞ்சாலம், இப்போது அதை முன்னணியில் நின்று நடத்தத் தொடங்கிற்று. ஆட்சியாளர் இது கண்டு புழுக்கமுற்றனர். 1857லிருந்தே லாரன்ஸ் துணைவரின் நிறத்திமிர் மரபும், கொடுங்கோன்மை மரபும் பாஞ்சாலத்தில் இருந்து வந்தன.அதற்குப் பக்கமேளமடிக்கும் அடிமை மன்னர் மரபையும் அவர்களுடைய சீக்கியப் படைகளையும் மட்டும அவர்கள் தட்டிக் கொடுத்துப் பிறர்மீது ஆணவம் காட்டி வந்தார்கள். இப்போது சீக்கியர் தாயகமான பாஞ்சாலமே தேசிய இயக்கத்தில் தலைமை வகிக்கத் துணிந்தது கண்டு அவர்கள் குருதி கொதித்தது.
டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்தியபால் ஆகிய பாஞ்சாலத் தலைவர் இருவர் எதிர்ப்பியக்கத்தை அமைதியாக நடத்த அரும்பாடுபட்டு வந்தனர். ஆனால், ஏப்பிரல் 9-ல் அவர்கள் திடுமெனக் கைது செய்யப்பட்டு, யாரும் இன்ன இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்பதை அறியாதபடி கடத்திச் செல்லப்பட்டனர். இது மக்கள் கிளர்ச்சித் தீயில் எண்ணெய் ஊற்றியது மாதிரி ஆயிற்று. தடையுத்தரவுகளும் தடியடிகளும் எங்கும் குமுறின. தில்லிப் பகுதியில் மக்கள் கட்டு மீறிக் காவலரை எதிர்த்ததாகக் காந்தியடிகளுக்குத் தெரிய வந்தது. மக்கள் கொதிப்பை அமைதிப்படுத்தி நிலைமையைச் சமாளிக்க உதவும் எண்ணத்துடன், அவர் தில்லிக்கு விரைந்தார். ஆனால், அவர் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.