இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
171
து
நினைவும் நிறத்திமிருடைய சில வெள்ளையர், பிற்போக்காளர் உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்தன என்பது ஒன்றே இந்நிகழ்ச்சிகளுக்கு வரலாறு தரக்கூடும் விளக்கம் ஆகும். 1857 புரட்சியை அடக்க உதவிய வீர சீக்கிய குலமே, 1920ல் இங்ஙனம் கிளர்ந்தெழுந்து நிற வெறியர் சீற்றத்துக்கு ஆளாயிற்று. வரலாறு தரும் விளக்கம் மட்டும் அன்றி, வரலாறு தரும் படிப்பினை என்றும் கூறலாம். ஆதிக்கவாதிகள் சீற்றம் விடுதலை உணர்ச்சியின்மீது கனன்றெழுவதைவிட, அடிமை உணர்ச்சி கொண்டவர்கள் புத்தெழுச்சிமீது மிக்குப் பாய்வது இயல்பு என்பதை இது காட்டுகிறது.
படுகொலையின் எதிரொலிகள்
பாஞ்சாலத்தின் பதைபதைப்பை மாநிலத்தின் பிறபகுதிகள் படிப்படியாக, சிறிது சிறிதாக, நாள், வார, மாதக் கணக்கிலேயே உணர்ந்தன. ஆனால், தாமதம் இவ்வகையில் மக்கள் மனக் கொதிப்பை மிகுதிப் படுத்திற்றேயன்றிக் குறைக்கவில்லை. காந்தியடிகளின் தலைமை மட்டும் இல்லாதிருந்தால், இப்படுகொலையின் விளைவாக மீட்டும் 1857 ஐப் பொய்ப்பிக்க வல்ல பெரும்புயல் கிளர்ந்திருக்குமென்பதில் ஐயமில்லை. அத்தகைய புயலால் பிரிட்டனின் ஆட்சிமீது பின்னும் பெருங்கறை ஏற்பட்டிருக்கலாம்; அதனால் பிற நாடுகளில் ஏற்பட்டது போன்ற விடுதலையும் ஒருவேளை கிட்டியிருக்கலாம். அதன் அழிவு பெரிதாயிருந்திருக்கும்; ஆனால், இந்தியாவின் ஆன்மிக வலுவும் குறைந்திருக்கும். இந்நிலை ஏற்படவில்லை. ஏனெனில், மக்கள் மனக் கொதிப்பாகிய புயல் வெள்ளத்துக்குக் காந்தியடிகள், கட்டுப்பாடு என்ற தடைகள், அணைகள் இட்டுத் தேக்கி பொறுமை, தியாகம் ஆகிய கரைகளிடையே அவற்றை ஓடவிட்டு விடுதலை இயக்கப் பெரும்பொறியை இயக்கும் சத்தியாக்க முனைந்தார். அவ்வியக்கமே 'ஒத்துழையாமை இயக்கம்' என்ற பெயரால் இந்திய வரலாற்றில் இடம் பெற்றது.
மகாத்துமா காந்தி இயக்கம் தொடங்குமுன்பே, மக்கள் மனக்கொதிப்பு, சட்ட மன்றங்கள் வரை நிரம்பிப் பொங்கி வழிந்தது. இச்சமயத்தில் பண்டித மதன்மோகன் மாளவியா மன்ற உறுப்பினராயிருந்தார். அவர் ஜாலியன்வாலா பற்றி மன்றத்தில்