(172)
அப்பாத்துரையம் - 12
90க்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு,அரசியலாரைத் திணற அடித்தார். பிரிட்டிஷ் அரசியல் மன்றத்திலும் இந்தியாவின் பிரிட்டிஷ் நண்பர்களின் முயற்சியால் சரமாரியான கேள்விகள் எழுந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் நிழலில் இந்தியா அடிமையை அணைத்துக் கொண்டிருக்கிறது என்ற பிரிட்டிஷ் பிரசாரத்தால் இந்தியா மீது அசட்டையாயிருந்த உலக மக்களின் அமைதிகூடக் கலையத் தொடங்கிற்று. ஆனால், இந்திய மக்கட்கடல் இவற்றாலெல்லாம் அமையவில்லை. “கொடுங்கோலன் டயர் செயல் விசாரிக்கப்பட்டு, அவன் தக்க தண்டனை பெற வேண்டும். அவனுக்குப் பக்க பலமாயிருந்த பாஞ்சால ஆட்சி முதல்வர் ஓட்வியரும், உடந்தையாயிருந்த இந்திய முதல்வரும் திருப்பி அழைக்கப்பட வேண்டும்” என்ற குரல்கள் எங்கும் எழுந்தன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர் இத்தனை கொந்தளிப்புகளுக் கிடையேயும் தம் வீம்பை முற்றிலும் விட்டு விடாமல் தயக்கமுற்று நின்றனர். பிற்போக்காளர்கள் பிடிக்கும் நிற வெறியர்கள் வீறாப்புக்கும் அவர்கள் தம்மாலியன்ற மட்டும் விட்டுக் கொடுக்க முனைந்தார்கள். படைத்தலைவன் டயர் திருப்பியழைக்கப் பட்டான். ஆனால், அவனுக்கு உடந்தையாயிருந்த பாஞ்சால ஆட்சி முதல்வரும், மறைமுக ஆதரவு தந்து நடுநிலை தவறிய மாநில ஆட்சி முதல்வரும் திருப்பியழைக்கப்படவில்லை. இது இந்தியர் தன் மதிப்பை உறுத்திற்று. அத்துடன் பிரிட்டிஷ் மன்றத்தில் டயர் முதலிய கொடியோர் நீண்ட கேலி விசாரணைக்குபின் மன்னித்து விடுவிக்கப் பட்டனர். இது உண்மையில் மன்னிப்பன்று; கண்கழிப்பு நடவடிக்கையே என்பதைப் பிற்போக்காளர் செயல் எடுத்துக்காட்டிற்று. அவர்கள் அவருக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டிதழ்கள் வழங்கி வானளாவப் புகழ்ந்தார்கள்; வீரப் பதக்கமும் வைர வாள் பரிசும் அளித்தார்கள். இச்செயல்கள் இந்தியரையும், இந்தியாவையும் அவமதிப்பவையாய் இருந்தன. பிரிட்டனின் நேர்மைமீது மிதவாதப் போக்குடையவர்களுக்கு இருந்த நம்பிக்கையும், காந்தியடிகள் போன்ற ஞானியர்க்கு இருந்த நம்பிக்கையுங்கூட அகன்றன. அடங்கிய சீற்றமும் வெறுப்பும் அடக்க முடியா மனக் கசப்பும் எங்கும் பரவின.
படுகொலை பற்றிய விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியலார்