பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

173

இணங்கினர். அது ஹண்டர் பெருமகனார் தலைமையில் அமைக்கப்பட்டதனால், 'ஹண்டர் குழு' என்று வழங்கப் பட்டது. அதில் ஹண்டர் பெருமகனார், கனம்ரைஸ், ஸர் ஜார்ஜ்பாரோ, நீதிபதி ராங்கின், தாமஸ் ஸ்மித்து என்னும் ஐந்து வெள்ளையரும், பண்டித ஜந்நாராயணா, ஸர் சிமன்லால் ஹரிலால் சேதல்வாட், கல்தான் ஹமீத்கான் என்னும் மூன்று இந்தியரும் இருந்தனர். வெள்ளையர் நேர்மையில் ஐயுற்ற மக்கள், அவர்களின் பெரும்பான்மை கண்டு அதனைக் கண்டித்தார்கள். வெள்ளையுறுப்பினர் கூடிய மட்டும் அட்டூழியங்களை மறைக்கவும், அவற்றுக்குத் தேசியத் தலைவர்களையும் பொது மக்களையும் குறை கூறவும் அரும்பாடு பட்டிருந்தார்கள். குழுவிலேயே வெள்ளையரிடமிருந்து இந்தியர் பிரிந்து தனிக் கருத்துத் தெரிவித்தனர். அது நெடுநாள் வெளியிடப்படா திருந்தது. மாநில ஆட்சி முதல்வர் அறிவுரைக் குழுவிலேயே இந்திய உறுப்பினராயிருந்த ஸர் முகம்மது ஹாஷஃவி தாமே நேரில் ஆராய்ந்து ஒரு தனி அறிக்கை வெளியிட்டார்.

பேரவையும் இவ்வகையில் வாளா இருக்கவில்லை. மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைப்பது தங்கள் கடமை எனப் பேரவைத் தலைவர்கள் கருதினார்கள். மகாத்துமா காந்தியடிகளின் தலைமையிலேயே ஸி.ஆர்.தாஸ், தயாப்ஜி, ஜயகர், நேரு ஆகியவர்களடங்கிய ஒரு பேரவை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

மே 3இல் ஹண்டர் குழுவின் அறிக்கை வெளிவந்தது. அதற்குள்ளாகவே மற்ற அறிக்கைகளும் வெளிவந்தன. அரசியலார் சார்பான குழுவின் ஒருதலை விளக்கம் இதனால் வெளியுலகில் பொய்ப் பிரசாரம் செய்ய முடியாது போயிற்று.

பஞ்சாபு நிகழ்ச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு நீக்க முடியாத ஒரு பெருங்கறை. ஆனால் இந்தியாவின் மனமாற்றத்திலும், அரசியல் வளர்ச்சியிலும்,பேரவையின் வரலாற்றிலும் அது ஒரு புத்தூழியின் சின்னம்! நடுவு நிலையாளரும் ஆன்மிக ஞானியுமான காந்தியடிகளை ஒரு முதல்தரப் போர்த்தளபதியாக்கிய நிகழ்ச்சி துவே. இப்படுகொலை நேர்ந்திரா விட்டால், காந்தியடிகளின் சத்தி முழுவதும் தீவிரக் கட்சியின் பக்கமாய்ச் சாய்ந்திராது. சீர்திருத்தங்களை ஏற்கும் மிதவாத மனப்பான்மை அவ்வளவு