பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 12

174 ||. விரைவில் மக்கள் ஆதரவை முற்றிலும் இழந்தும் இராது. பேரவையில் மிதவாதிகள் ஆதரவற்று 1919ல் வெளியேறும்படி செய்த ஆட்சியாளரின் செயல் இதுவே என்னலாம்.

நாட்டு மக்கள் விழிப்படைவதற்குக் காரணமாயிருந்த ஏப்ரல் 6 தொடங்கி ஒரு வாரத்தை ஆண்டுதோறும் தேசிய வாரமாகக் கொண்டாடும்படி காந்தியடிகளும் பேரவையின் கட்டளை பிறப்பித்தனர். அத்துடன் அதன் இறுதி நாளாகிய ஏப்பிரல் 13-ந் தேதி இந்தியர் கடுந்துயருக்கு ஆட்பட்ட நாளாதலால், அந்நாள் தேசியத் துக்க நாளாகவும் நோன்பு நாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.

ம்

புதிய குறிக்கோள்: விடுதலை அரசு

1915- ஆம் ஆண்டிலேயே பாதுகாப்புச் சட்டத்தின்படி முகம்மது அலி, ஷவுகத்து அலி என்ற அலித்துணைவர்களும், வங்கத் தலைவர் சியாம் சுந்தர் சக்கரவர்த்தியும், பாஞ்சாலத் தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள். 1919ல் அவர்கள் விடுதலையடைந்து தேசிய இயக்கத்தில் வந்து கலந்து கொண்டார்கள்.முந்திய ஆண்டிலேயே மிதவாதிகள், தனியாகப் பிரிந்து, ‘இந்திய மாநிலப் பொதுநலக் கழகம்' என்ற ஒரு கட்சியை அமைத்திருந்தார்கள். 'இதனால், பேரவையில் தீவிரக்கட்சி முழு ஆதிக்கம் வகித்தது. டிஸம்பரில் பண்டித மோத்திலால் தலைமையில் கூடிய பேரவை, பஞ்சாபுப் படுகொலை அநீதியை வன்மையாகக் கண்டித்தது, அச் செயலால் பிரிட்டிஷ் அரசியலார் இந்திய மக்களின் நம்பிக்கையை முழுதும் இழந்துவிட்டனர் என்றும்; இந்தியர் தன்னம்பிக்கையைக் காக்கும் எதிர் நடவடிக்கைகளாகக் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஏற்பது என்றும் பேரவை முடிவு செய்தது.

காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மாநில அடிப்படையில் இந்தியாவுக்குக் காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த முதற்போராட்டத் திட்டம் ஆகும். இம் முதற் போராட்டத்தை விடப் பெரிய அளவில் இந்தியா இதன் பின் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இம் முதற் போராட்டத் திட்டம் இன்றும் நம்மை மயிர்க்கூச்செறிய