பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

175

வைப்பதேயாகும். இதில் காந்தியடிகள் கோரிய தியாகம் பெரிது. 'மனித சமுதாயத்தில் இடம்பெறும் நாடு இத்தகைய தியாகங்களைச் செய்ய முடியுமா?' என்று எவரும் மலைக்க இடமுண்டு. ஆனால், இத்தகைய தியாகங்களைக் கோரினார் காந்தியடிகள்! இவற்றை ஏற்றுப் பெயரளவில் நிறைவேற்றி னார்கள். இந்திய மக்கள்! இது காந்தியடிகளின் ஒப்பற்ற தலைமைக்கு ஒரு சான்று; அது போலவே, இந்தியப் பெருமக்களின் ஆழ்ந்த வீரத்துக்கும் தியாக ஆற்றலுக்கும் இத்திட்டம் இன்றும் சான்று பகரத்தக்கது.

ம்

மக்கள் நலனில் அக்கறையற்ற அரசியலார் அளித்த பட்டங்களை இந்தியர் யாவரும் துறந்துவிட வேண்டும். அரசியலார் பணிநிலையங்களிலிருந்தும், அவர்கள் நடத்தும் பள்ளி கல்லூரி முதலிய கல்வி நிலையங்களிலிருந்தும் நாட்டுப் பற்றுடைய எல்லாரும் விலகிவிட வேண்டும். நேர்மையறியாத அரசியலாரின் நீதிமன்றங்களை அணுகாமல் விலகிவிட வேண்டும், அவற்றின் எல்லை வரையறையற்ற வழக்குகளால் ஏழை மக்கள் வாழ்வைக் கசக்கிப் பிழிவதற்கு உடந்தையாயிருக்கும் வழக்கறிஞரனைவரும் அத்தொழிலையும் அதற்கான தம் பட் வுரிமைகளையும் துறந்து, நாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும். சட்ட மன்றங்களில் தேர்வுக்கு நின்றோ, தேர்தலில் மொழிச் சீட்டாளராகக் கலந்தோ அரசியலாரின் ஆட்சியுடன் ஒத்துழைப்பது தவறாதலால், அம்மன்றங்களையும் தேர்தல் களையும் நாடாதொழிய வேண்டும்.' ஒத்துழையாமைத் திட்டம் கோரிய மாபெருந் தேசியத் தியாகங்கள் இவையே.

ஒத்துழையாமை இயக்கப் பேராற்றில் மற்றொரு வளமான கிளையாறு 1920-ஆம் ஆண்டு வந்து கலந்துகொண்டது. அவ்வாண்டு மே திங்கள், இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்ட கிலாபத்து மாநாட்டிலும் ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

‘கிலாபத்து' என்பது அரபு மொழிச் சொல் முஸ்லிம் உலகின் தலைவர்க்குக் கலிபா என்றும்,அவர் பதவிக்குக் கிலாபத்து என்றும் பெயர்கள் வழங்கும். துருக்கிப் பேரரசரே நீண்ட காலமாக உலக முஸ்லிம்களால் கலிபாவாகக் கருதப் பட்டிருந்தார். முதல் உலகப் போரில் துருக்கி, எதிரி நாடுகளான