176 |
அப்பாத்துரையம் - 12
ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகியவற்றுடன் சேர்ந்து போரிட்டுத் தோற்றது. போரில் இந்திய முஸ்லிம்கள் உதவியையும் மற்ற இந்தியர் உதவியையும் பிரிட்டன் கோரியபோது, கலிபாவைப் பாதுகாப்பதாக முஸ்லிம்களுக்கும், தன்னரசு வழங்குவதாக எல்லா இந்தியருக்கும் உறுதியளித்திருந்தது. இந்தியாவுக்குத் தன்னரசு வழங்கவில்லை என்பதே பேரவையின் குற்றச்சாட்டு. அதே சமயம் கிலாபத்தைக் காக்கவும் பிரிட்டிஷ் அரசியல் தவறிவிட்டது. துருக்கிப் பேரரசின் பகுதிகளும் மற்ற எதிரி வல்லரசுகளின் பகுதிகளைப் போல நேச நாட்டினர்களால் கைப்பற்றப் பட்டன. இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்திற்று. காந்தியடிகள் பிரிட்டனுடன் அறப்போர் தொடங்குவதற்கான காரணங்களுள் இதனையும் ஒன்றாகக் கூறியிருந்தார். கிலாபத்து மாநாடு இந்து முஸ்லிம் நட்புக்கான இப்புதிய அறிகுறியை ஆர்வத்துடன் வரவேற்று ஒத்துழை யாமைத் தீர்மானத்தை நிறைவேற்றிற்று.
து
1916இல் பேரவை முஸ்லிம் சங்க ஒப்பந்தத்தின் பயனாக நிறுவப்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமையாகிய கற்கோட்டை இப்போது புதிய இருப்புக் கோட்டையாய் வலுப்பெற்றது. காந்தியடிகள் நிறுவிய இப்புதிய இந்து முஸ்லிம் கடைகால் பிரிட்டிஷ் ஆதிக்கக் குழுவின் உள்ளத்தை உறுத்தியிருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.1906லிருந்து அவர்கள் விதைத்து வந்த இந்து முஸ்லிம் வேற்றுமைப் பயிரின் வளர்ச்சி, இப்புதிய ஒற்றுமையால் தடைபட்டது கண்டு, அவர்கள் முன்னிலும் பன்மடங்கு அப்பிளவை வலியுறுத்த முற்பட்டார்கள் என்பதையும்; அதில் இந்தியாவின் செய்பிழை செய்யாப் பிழைகள் இரண்டினாலும் பிரிட்டிஷ் சூழ்ச்சி நாளடைவில் வெற்றி பெற்றது என்பதையும் பிற்கால வரலாறு காட்டியுள்ளது.
1920-ஆம் ஆண்டில் பேரவை சேலம் விஜயராக வாசாரியார் தலைமையில் நாகபுரியில் கூடிற்று. இது ஒத்துழையாமைத் தீர்மானத்தை மீண்டும் வற்புறுத்தியதுடன், அதற்கு முன்னிலும் பேரளவான ஆதரவு தந்தது. அதன் திட்டமும் மாநில அடிப்படையில் பெருக்கமாக விரிவுபடுத்தப் பட்டது. மந்றும் இப்பேரவைக் கூட்டத்திலேயே பேரவையின் அரசியல் குறிக்கோள் 1906க்குப்பின் மீண்டும் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்