பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

177

பட்டது. 'நீதியும் அமைதியும் வாய்ந்த எல்லா வழிகளாலும் விடுதலை அரசுக்குப் பாடுபடுவதே பேரவையின் குறிக்கோள்,' என்று முடிவு செய்யப்பட்டது. புதிய குறிக்கோளுக்கேற்பப் பேரவை அமைப்பிலும், பெருங்குழு, செயற்குழு அமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டன. பெருங்குழுவின் உறுப்பினர் தொகை 3500 என்பதும்,செயற்குழு உறுப்பினர் தொகை 15 என்பதும் அறுதி செய்யப்பட்டன.

ஒத்துழையாமை இயக்கம்

ஒத்துழையாமை இயக்கம், 1921இல் தொடங்கப்பட்டு,1922 வரை மும்முரமாக நடைபெற்றது. இந்திய தேசிய இயக்கத்தின் முதல் வேள்விக்களம் இதுவே என்னலாம். விடுதலை இந்தியாவுக்காகப் பாடுபட்ட பெருந்தலைவர்களுட் பெரும் பாலார் இத்தாயக் வேள்விக்களத்திலிருந்து தோன்றியவரேயாவர். லாலா லஜபதிராய், ஸி.ஆர். தாஸ், பண்டித மோத்திலால் நேரு போன்ற பழந்தலைவர் பலர் அத்தீயில் குதித்தெழுந்து, புடமிட்ட பழந்தங்கம் போல மாற்றுயர்வுற்றுப் பொலிந்தனர். பண்டித ஜவஹர்லால் நேரு, தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸ் முதலிய ளைஞரும் அத்தீயில் குதித்து இளைஞர் தலைவராய் அதிலிருந்து புகழ் ஒளியுடன் வெளிவந்தனர்.

இந்தியாவின் மாநிலமளாவிய முதற்பொது மக்கள் இயக்கம், ஒத்துழையாமை இயக்கமே. அத்துடன் வீரத்தையும், தியாகத்தையும், துணிகரதீரத்தையும், வெறியார்ந்த நாட்டுப் பற்றையும் அளவுகோலாகக் கொண்டு நோக்கினால், அதுவே இந்தியாவின் முதன்மை வாய்ந்த போராட்டமும் ஆகும் என்னலாம். பிற்காலப் போராட்டங்களில் பொதுமக்கள் பின்னும் பேரளவில் திரண்டதுண்டு. ஆனால், ஒத்துழையாமைக் காலத்தில் மக்களிடம் கோரப்பட்ட தியாகங்கள் பின் என்றும் அவர்களிடம் கோரப்பட்டதில்லை. உயிரை வெறுத்து இளைஞர்கள் பேரவை இயக்கத்துக்கு உள்ளேயும் புறம்பேயும் போராடியதுண்டு. ஆனால், உயிரைத் துறப்பதைவிட வாழ்வைத் துறப்பது, நல்வாழ்வையும் உயர்பதவியையும் துறப்பது மனித இயல்புக்கு அருமையானது. இந்தியாவில் உயர்ந்த பட்டங் களுக்குப் பயின்று வந்த எத்தனையோ இளைஞர், மாணவ