178
அப்பாத்துரையம் - 12
மாணவியர். வழக்கு மன்றத்தில் முழங்கிய எத்தனையோ சிங்கக் குருளைகள், சட்ட மன்றங்களிலிருந்து ஆணை செலுத்திய எத்தனையோ ஒய்யார நம்பியர் நங்கையர், அன்று தம் கல்வியும் புகழும் இன்பமும் விடுத்துக் கடுந்தவமாற்ற முன்வந்தனர்! இத்தியாகிகளின் பட்டியலில் தலைசிறந்த இருவர் பண்டித ஜவஹரும், சுபாஷ் போஸுமேயாவர். முந்தியவர் மாளிகை வாழ்வையும், உயர்தர ஆங்கிலப் பட்டங்களையும் விடுத்து, மனைவி புதல்வியருடன் மக்களிடையே நின்று போராட முன் வந்தார். பிந்தியவர் இந்திய ளைஞர்களின் உச்சக் குறிக்கோளாகிய ளாகிய இந்தியா மாவட்ட ஆட்சித் தலைவர் பட்டம் துறந்து மக்கட் போரில் ஈடுபட்டார்.
ஒத்துழையாமை இயக்கம் எழுப்பிய மக்கள் ஆர்வம் பெரிது. அதுவரை இந்தியாவின் இயக்கங்கள் எவையும் எல்லா மாகாணங்களிலும், எல்லா வகை மக்களையும், ஒரே சமயத்தில் ஒரே கிளர்ச்சியில் ஈடுபடுத்தியதில்லை. தண்பொருநை மணற்பரப்பின்மீதும் திருவல்லிக்கேணி கடற்கரை மீதும் அது மக்கள் அலைகளை மோதவிட்டது. பம்பாய், கல்கத்தா, அலகாபாது நகரங்களை அது போர்க்களங்களாக்கிற்று. திடல்களும் வெளிகளும் எங்கும் திலகர் சதுக்கங்கள், காந்தி மைதானங்கள், ஸி.ஆர்.தாஸ் கட்டங்கள், வ.உ.சி. மேடைகள் ஆயின. கடைத்தெரு கம்பளங்களும், பள்ளி கல்லூரிகளும், ஆலைகளும் போர்த்தளங்களாயின. வழக்கமாக அமைதியும் ஒய்யாரப் பேச்சும் நிலவிய சட்ட மன்றங்களிற்கூட, அது கலகலப்பும் புத்துயிர்ப்பும் ஊட்டிற்று.
மாணவ மாணவியர் பேரளவில் பள்ளி கல்லூரிகளை விட்டகன்றனர். பல பல்கலைக் கழங்களில் தேர்வுக்கு அமரும் மாணவர் தொகை மிகமிகச் சிறிதாயிருந்தால், சில சமயம் தேர்வில்லாமலே எல்லா மாணவரையும் எளிதாகத் தேற வைத்தனர். பெயரளவில் தேர்வுகள் நடைபெற்றபோதும், அது கண்கழிப்பு முறையாக மட்டுமே இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் பிற்பகுதியில் கல்வி இழந்த மாணவர் நலன்களில் பல ஆக்கத்துறைப் பணியாளர் கருத்துச் செலுத்தினர். வங்கத் தலைவர் சித்தரஞ்சனதாஸ், இளைஞராயிருந்த சுபாஷ் போஸ் ஆகியவர்கள் முயற்சியால் கல்கத்தா தேசியக் கல்லூரியும்