182
அப்பாத்துரையம் - 12
கொண்டு வந்தவர் மௌலானா ஹஜரத் மோகனி என்பவர். பத்ததாண்டுகளுக்குள் ‘குடியேற்ற அரசு நிலையா அல்லது முழு நிறை விடுதலையா?' என்ற வினாவை எழுப்பிப் பேரவையையே இரண்டுகூடாரங்களாகத் தற்காலிகமாகப் பிரித்த போராட்டத்தை இது நி னைவூட்டுவதாயுள்ளது. காலநி காலநிலை தாண்டிய இத்தீர்மானத்தைக் காந்தியடிகள் எழுந்தவுடன் எதிர்த்ததால், இது ஆதரவற்றுக் கைவிடப்பட்டது என்பதை அறிகிறோம்.
இத்தீர்மானத்தின்
முக்கியத்துவத்தை அயலாட்சி அரசாங்கம் உணர்ந்திருந்தது. இதைக் கொண்டு வந்தவர் மீது அது நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை தந்தது.
1921-ஆம் ஆண்டுப் பேரவையின் மற்றொரு சுவையான நிகழ்ச்சி பாபா குருதத்தசிங்கு என்பவரைப் பற்றியது. அவர் கப்பல் சட்டத்தை மீறி 1914ல் 'குருநானக்கு' என்ற பெயருடைய ஒரு கப்பலைக் கடலில் செலுத்தியிருந்தார், இதற்காக அவர் பிரிட்டிஷாரால் சிறைப்படுத்தப்பட்டு அவதியுற்றார். பேரவை அவர் வீரச் செயலுக்குப் பாராட்டு அளித்தது. ஆனால், பேரவை இதனையே இந்தியாவின் முதற் கப்பற் கழகம் என்று கூறுவது தமிழருக்கு வியப்புத் தருகிறது! காந்தியடிகளின் புதிய புகழொளி வ.உ. சிதம்பரனார் 1906லேயே நடத்திய கழகப் போராட்டப் புகழை மறைத்திருந்தது என்பதை இது காட்டுகிறது. திரும்ப அவர் புகழைப் பேரவையில் நாம் கேட்பது அவர் மறைந்த ஆண்டை அடுத்த 1937- ஆம் ஆண்டுப் பேரவையிலேயேயாகும்.
சௌரிசௌரா நிகழ்ச்சி: காந்தியடிகள் சிறைத்தண்டனை
ஒத்துழையாமை இயக்கத்தின் பிற்கூறாகச் சட்ட மறுப்பு, வரிகொடா இயக்கம் ஆகியவற்றை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டிருந்தார். பிப்பிரவரியிலேயே பர்தோலியில் சட்டமறுப்பைத் தொடங்கிவிடுவதாகவும், அடுத்து ஆந்திர மாகாணத்தில் குண்டூர் முதலிய பகுதிகளிலும் வரி கொடா இயக்கம் நடத்துவதாகவும் ஏற்பாடாகி இருந்தது. தீவிர சீக்கியக் கட்சியான அகாலி சங்கத்தினர் தம் உரிமைகளுக்காக இச்சமயம் புரட்சிகரமான போராட்டத்திலிறங்க முன்வந்திருந்தனர்.