இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
தன்னாட்சிக் கட்சி
185
காந்தியடிகளுக்கு முன்பே ஸி ஆர்.தாஸ், ஆறுமாத காலம் சிறைத் தண்டனை பெற்றிருந்தார். காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது அவர் விடுதலை பெற்றார்.
1921ல் பேரவைக்குத் தேர்வு பெற்ற பின்பே ஸி.ஆர். தாஸ் சிறைப் பட்டிருந்தார். இப்போது விடுதலையான பின், அவர் அடுத்த ஆண்டு கயாவில் கூடிய பேரவைக்குத் தலைவரென ஒரு மனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1922-ஆம் ஆண்டு இந்திய மக்களின் தியாகங்கள் உச்ச நிலையை அடைந்தன. காந்தியடிகள் நீதிமன்றத்தில் கூறியபடி பிரிட்டிஷ் அரசியலார், தாம் பசப்பி வந்த உயர்குறிக்கோள் களையும் இந்தியர் நன்மதிப்பையும் புறக்கணித்துப் பட்டாங்கமாகப் பேய்த்தன்மையுடன் நடந்து கொண்டனர். பல டங்களில் மக்கள் போராடும் சத்தியும் வாழும் ஆற்றலும் இழந்து தவித்தார்கள். இந்நிலையிலும் தொடர்ந்து போராடப் பலர் தயங்கவில்லை. ஆயினும், மக்களின் தியாகங்களுக்கு ஓய்வு தந்து, போராட்ட முறையை மாற்றியமைக்க வேண்டுமென்ற கருத்துப் பல பேரவைத் தலைவர்களிடையே எழுந்தது. இன்னும் பலர் அரசியல் போராட்டத்தில் ஆன்மிகத் தூய்மை இடம் பெறுவதை விரும்பவில்லை. இத்தகையார் ஒத்துழையாமையை நாட்டு வாழ்வில் புறத்தே மட்டும் நடத்தாமல், சட்டமன்றங் களுக்குள்ளேயும் நடத்த வேண்டுமென்று விரும்பினர்; “பேரவை சட்டமன்றங்களைப் புறக்கணிப்பதாலேதான் அரசியலார் சட்டசபையிற் புகுந்த பிற்போக்காளர்களையும் மிதவாதி களையும் துணைக்கொண்டுஅடக்குமுறையாட்சியை வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது" என்று அவர்கள் வாதிட்டார்கள்.
கயாப் பேரவையில் முதன்முதலாகச் சட்டசபை நுழைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பேரவைத் தலைவரான ஸி.ஆர்.தாஸ் வெறும் பேரவைத் தலைவராய் மட்டுமில்லை. அவர் இப்புதிய கோட்பாட்டுக்குத் தலைமை வகித்தவரா யிருந்தார். அத்தீர்மானத்தை அவர் ஆதரித்தார். ஆனால், சென்னைத் தலைவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் அதை எதிர்த்தார். எனினும், பேரவை இவ்வாண்டு எவ்வகை முடிவும் செய்யவில்லை. காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது