பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

187

அதே ஆண்டு டிஸம்பர் 28-ஆந் தேதி விடுதலை பெற்ற தலைவர் மௌலானா முகம்மது அலி தலைமையில் பேரவை மீண்டும் கூட்டப்பெற்றது. அது தில்லியில் கூடிய பேரவையில் ஏற்பட்ட புதிய நிலைமைகளையும் கோட்பாடுகளையும் ஆராயும் நோக்கத்துடன் சிறப்புப் பேரவையாகவே கூட்டப்பட்டது. தன்னாட்சிக் கட்சியின் சட்டசபை வேலைக்கு அது இணக்கமளித்ததுடன், சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதென்றும் தீர்மானித்தது. பேரவைக்கான தொண்டர் படையை விரிவான அளவில் அமைத்ததும் தொண்டர்களுக்கு தியம் வகுத்ததும் இக்கூட்டத்திலேயே ஆகும். கதர்த் தொழிலை நடத்த இந்தியா மாநிலக் கதர்க்குழு அமைத்ததும் இவ்வாண்டின் முக்கியச் செயல்களில் ஒன்று.தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கெனியா இந்தியப் பேரவைக்கு இந்தியாவின் சார்பில் திருமதி சரோஜினி நாயுடுவும் திரு. ஜார்ஜ்ஜோசஃப்பும் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டார்கள்.

1923-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடுச் சட்டசபையில் பேரவைத் தன்னாட்சிக் கட்சிக்கு 48 இடங்கள் கிடைத்தன. இதன் பயனாக மாநில ஆட்சி முதல்வர் மனம்போல எளிதில் ஆட்சி நடைபெற முடியவில்லை. உப்பு வரியைச் சட்டசபை மறுத்தது. ஆட்சி முதல்வர் அதைத் தம் தனிப்பட்ட சிறப்புரிமையைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் நீட்டித்தா ரானாலும், அதனை முன் போலச் சட்டப்படியான நடவடிக்கை ஆக்க முடியவில்லை. ண்டுதோறும் சட்டசபையில் அரசாங்கத்துக்கு இத்தகைய தோல்விகள் கிடைத்து வந்தன. சிறப்பாக வரவு செலவுத் திட்டங்கள் வரும்போது ஆட்சியாளர் திணறடிக்கப்பட்டனர்.

சி

மாகாண அரசியல்களிலும் தன்னாட்சிக் கட்சி வங்கத்தில் பேரளவு வெற்றி பெற்றது. மாநில அரசியலில் வெற்றி கண்டது போலவே இங்கும் அவர்கள் இரட்டை ஆட்சி முறையைத் தாக்கி முறியடிப்பதில் வெற்றி கண்டார்கள். சென்னையில் 1920லிருந்தே பார்ப்பனரல்லாதார் கட்சி என்று வழங்கப்படும் நேர்மைக் கட்சி, பெரும்பான்மை பெற்று ஆண்டு வந்ததால், தன்னாட்சிக் கட்சிக்குத் தொடக்கத்தில் மிகுதியான வெற்றி கிட்டவில்லை. 1927ல் அவர்கள் ஓரளவு வலிமை பெற்றாலும், தனி அமைச்சவை