பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

அப்பாத்துரையம் - 12

அமைக்க முடியாமல், தனியாட்களுடன் ஒன்றுபட்டுச் சில காலம் கூட்டு அமைச்சவை ஏற்படுத்த முடிந்தது.

காந்தியடிகளின் விடுதலை

காந்தியடிகள் ஆறு ஆண்டுக்காலம் தண்டனை பெற்றாலும் உடல் நலிவு காரணமாக 1924 பிப்பிரவரி 5ல் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்ததும் தாம் சிறை செல்லும்போது நாடு இருந்த நிலைமையில் அது இப்போது இல்லை என்பதை அவர் கண்டுகொண்டார். போராட்டத்தின் கடுமையாலும் தியாகங்களின் அளவாலும் மக்கள் மனம் உடைந்து போயிருந் தார்கள். அத்துடன் அரசியலுக்கு அவர் தந்த ஆன்மிகப் போக்கில் ளைஞர்களுக்கும் புதிய தலைவர்களுக்கும் உள்ளூறப் பற்றுறுதி இல்லை என்பதையும் அவர் உணர்ந்தார். இந்நிலையில் அவர் சட்டசபை நுழைவுக் கட்சித் தலைவர்களான ஸி.ஆர். தாஸ், பண்டித மோத்திலால் நேரு ஆகியவர்களுடன் அரசியல் நிலைகளைப் பற்றிப் பேசி ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு வந்தார். சட்டசபை நுழைவுக்குத் தாம் ஆசி வழங்குவதாக அவர் ஏற்றுக் கொணடார்.

சிறையிலிருந்து விடுதலை பெற்ற காந்தியடிகள் தலைமையிலேயே 1924ல் பேரவை பெல்காமில் கூடிற்று. அது காந்தி- தாஸ் - நேரு- சமரஸ ஏற்பாட்டை வரவேற்றது. மாநில அடிப்படையில் இப்பேரவை தொண்டர் படை அமைத்ததுடன் தொண்டர்களுக்கு ஊதியம் தரும் திட்டத்தையும் ஏற்படுத்திற்று. கௌஹத்தித் தனியரசிலுள்ள வகுப்புக் கலவர நிலைமையில் அங்குள்ள இந்துக் குடிகள் அஞ்சி வெளியேற நேர்ந்தது. பெல்காம் பேரவை இது வகையில் வருத்தம் தெரிவித்தது.

இவ்வாண்டில் நாடெங்கும் பேரளவில் வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன. அவை காந்தியடிகளின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தின. மக்களின் இத்தவறுகளுக்கு அவர் வழக்கம்போலத் தாமே கழுவாய் தேடி, 22 நாள் உண்ணா நோன்பாற்றினார். இதனால், வகுப்புத் தலைவர்கள் தில்லியில் கூடி மாநாடு நடத்தினார்கள். வகுப்புக்களிடையே தேச உணர்ச்சி பரப்பப் பாடுபடுவதாக இந்து முஸ்லிம் தலைவர்கள் காந்தியடிகளுக்கு வாக்குறுதியளித்தார்கள்.