பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

189

அரசியல் இயக்கங்களிலிருந்து தற்காலிகமாகச் சிறிது ஓய்வு பெற்றிருந்த காந்தியடிகள், இப்போது தீண்ட தீண்டாமை, கதர்த் தொழில் முதலிய ஆக்கத்துறை அலுவல்களில் பெரிதும் கருத்துச் சலுத்தியிருந்தார். தென்னாட்டில் 'காந்தியடிகளின் வலக்கை' என்றும் 'பெரியார்' என்றும் புனைந்துரைக்கப்படும் தமிழகப் பேரவைத் தலைவர் ஈ.வே. இராமசாமியார் தம் வாழ்க்கைத் துணைவியாராகிய நாகம்மையாருடன் திருவாங்கூரிலுள்ள வைக்கம் நகரில் கோயில் நுழைவுப் போராட்ட இயக்கம் நடத்திப் பெருவெற்றி பெற்றார். கள் விலக்கு, கதர் ஆகிய மற்றக் காந்தீய ஆக்க வேலைகளிலும் இவர் அரும்பாடுபட்டுத் தமிழகத்தை இத்துறைகளில் முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

தென்னாட்டுத் தலைவர்களிடையே திரு.வி. கல்யாண சுந்தரனார், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகிய இருவரும், பெரியார் ஈ.வே. ராமசாமியின் சமுதாய, சமயச் சீர்திருத்தப் பணிகட்கு ஆதரவு தந்தனர். திரு. வில. கல்யாணசுந்தரனார், வ.உ.சிதம்பரனார் தொடங்கி வைத்த தொழிலாளர் போராட்ட அலையையும், மறைமலையடிகளாரின் தமிழியக்க அலையையும் பேரவை இயக்கப் பரப்பில் கொண்டு வந்து இணைக்கப் பாடுபட்டார்.

தேசபந்து ஸி.ஆர். தாஸ் மறைவு

சட்டசபைக்கு வெளியே தீவிர அரசியல் கிளர்ச்சி இப்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், வங்காளத்தில் ஆட்சிக் கயிற்றைப் பற்றியிருந்த தன்னாட்சிக் கட்சியை ஒழிக்க எண்ணி, பிரிட்டிஷ் ஆட்சிக்குழு மும்முரமான அடக்குமுறையில் இறங்கிற்று. அதில் சுபாஷ் போஸ் நான்காண்டு தண்டனை பெற்றார். தன்னாட்சிக் கட்சிக்கும் சட்டசபை நுழைவை விரும்பாத மற்றப் பேரவையாளர்களுக்கும் இடையே இப்போது வர வர ஒற்றுமை வளர்ந்து வந்தது. ஆனால், வெண்ணெய் திரளும் சமயம் தாழி உடைந்தது போன்ற நிலை இப்போது ஏற்பட்டது. ஜூன் 16-ஆம் தேதி ஸி.ஆர். தாஸ் உயிர் நீத்தார்.

இந்தியா முழுவதும் இதனால் துயருள் மூழ்கிற்று. காந்தியடிகள் சிறைப்பட்டிருக்கும் போது தம் பொறுப்பிலேயே நின்று வருங்கால பேரவைக்குப் புது வழி காட்டியவர்