பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(190

அப்பாத்துரையம் - 12

அப்பெரியார். அவர் மறைவுக்கு 1925ல் கான்பூரில் திருமதி சரோஜினி நாயுடு தலைமையில் கூடிய பேரவை பரிந்துரை தெரிவித்ததுடன், அவர் நினைவு நிதியாகப் பத்து லட்ச ரூபாய் திரட்ட ஏற்பாடும் செய்தது. இதன் உதவியால் ஸி.ஆர். தாஸ் வாழ்ந்த வீடு,மாதர் குழந்தைகள் உதவிக்கான மருந்துவ நிலையம் ஆக்கப்பட்டது. பேரவை இப்போது சட்டசபை நடவடிக்கை களை ஏற்றுத் தன்னாட்சிக் கட்சியையே தன் சட்டசபைக் கிளையாக அமைத்துக் கொண்டது. பேரவைக் குழுவின் வெளிநாட்டுப் பிரசார அரங்கம் ஒன்றும் இவ்வாண்டு அமைக்கப் பட்டது.

திரு.

தென்னாட்டின் தனிப்பெருந் தலைவர்களுள் ஒருவரான சீனிவாச அய்யங்காரின் தலைமையிலேயே 1926ல் களஹத்தியில் பேரவை நடைபெற்றது. அய்யங்கார் இந்தியாவின் தலைசிறந்த அறிஞருள் ஒருவர், ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் அரசியல் உச்சநிலைப் பகுதிகளில் ஒன்றான வழக்குரை முதல்வர் (Advocate General) நிலையையும், ஸி.ஐ.ஈ. பட்டத்தையும் துறந்து, அவர் அரசியல் வாழ்வில் குதித்தார். நேர்மைக் கட்சியுடன் நேசத் தொடர்பு கொள்ளத் தயங்காது, அதன் சமூகச் சீர்திருததத் தொண்டுகளில் அவர் ஈடுபாடு காட்டி வந்தார். சென்னைச் சமூகச் சீர்திருத்தச் சங்கத்தை அவரே நடத்தி வந்தார். தன்னாட்சிக் கட்சிக்கு அவர் செய்த சேவை பெரிது. 1926ல் சென்னைத் தேர்தலில் அது பெருவெற்றி காண அவரே பெரிதும் காரணராயிருந்தார். மாநிலச் சட்டசபையில் அவர் துணைத்தலைவராயிருந்து பணியாற்றினார்.

இவ்வாண்டு வகுப்புக் கலவர நிலைமை மீண்டும் மோசமாகி வந்தது. கல்கத்தா ஆறு வாரம் கலவரங்களால் அலைக்கழிவுற்றது. பேரவை முஸ்லிம்களின் பக்கமாகப் பெரிதும் சாய்கிறதென்று பேரவைத் தலைவர்களிலேயே சிலர் கருத லாயினர். பாஞ்சாலத் தலைவர்களான லாலா லஜபதிராயும், சுவாமி சிரத்தானந்தரும் இக்கருத்துக் கொண்டிருந்தனர். தன்னாட்சிக் கட்சியின் தேர்தலில் இது பிளவை உண்டு பண்ணிற்று.சென்னையைத் தவிர மற்ற மாகாணத் தேர்தல்களை இது பெரிதும் பாதித்தது.