பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

191

இதே சமயம் முஸ்லிம் வகுப்புவாதிகளிடையேயும் பேரவையின் தேசியம் இந்துக்கள் பக்கமாகச் சாய்ந்து வருகிறது என்ற ஐயம் எப்படியோ ஏற்பட்டு வந்தது. வந்தே மாதரப் பாடலும் பாரதமாதா கோயில்களும் இந்துக்களின் பண்பாட்டை வலியுறுத்தின என்று சிலரால் கருதப்பட்டது. இந்தி- உருதுப் போராட்டமும் இவ்வேறுபாட்டை வளர்த்தது. காந்தியடிகள் இரு மொழிகளின் எழுத்து முறைகளையும் ஏற்றதன் மூலமும், இரு மொழியாளர்களுக்கும் பொது அடிப்படையான மக்கள் தாய் மொழியாகிய இந்துஸ்தானியையே தேசிய மொழியாக ஏற்றதன் மூலமும் சமரஸ முயற்சிகளைச் செய்து வந்தார்.

சுவாமி சிரத்தானந்தர் இதே ஆண்டில் ஒரு மதவெறியனால் சுடப்பட்டு இறந்தார். கௌஹத்திப் பேரவை அவருக்குப் பரிவுத் தீர்மானம் நிறைவேற்றிற்று.

இவ்வாண்டு கருத்து மாறுபாடுடைய தீவிரத் தலைவர் சிலர் பிரிந்து சென்று, பம்பாயில் 'தேசியக் கட்சி' என்னும் தனிக் கட்சியை அமைத்தனர். ஆயினும், நடுச்சட்ட சபையில் அவர்கள் தன்னாட்சிக் கட்சியுடன் ஒத்துழைத்து வந்தார்களாதலால், மாநிலச் சட்டசபையில் மாறுபாடு எதுவும் ஏற்படவில்லை.

இந்தியாவுக்குப் பின்னாளில் விடுதலையளித்த அரசியலில் உறுப்பினராயிருந்த பெதிக் லாரன்ஸும் அவர் துணைவியாரும் கௌஹத்திப் பேரவைக்கு வந்திருந்தனர். 'இந்தியாவின் அடிமைத் தனம், அரசியல் துறையில் மட்டும் அடிமைத்தனமா யில்லை; பொருளியல், சமுதாயத்துறையிலும் அடிமைத்தனத்தை அதுவளர்க்கிறது' என்பது கேட்க அவர் வியப்படைந்தாரென்று அறிகிறோம்.

1818-ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழும், 1925- ஆம் ஆண்டு வங்கக் குற்றத் திருத்தச் சட்டத்தின் கீழும் பலரை விசாரணையின்றி அரசியலார் காவலில் வைத்திருப்பதைப் பேரவை கண்டித்தது.

பேரவைத் தேர்தலில் கலந்துகொள்பவர் யாவரும் கட்டாய மாகக் கதர் அணிதல் வேண்டும் என்னும் விதி வகுக்கப்பட்டது.