192
|| - -
அப்பாத்துரையம் - 12
குடியேற்ற நாட்டுரிமையா?, முழுநிறை விடுதலையா?
1924-ஆம் ஆண்டு போராட்டத் துறையில் இந்திய அரசியல் சோர்வுற்றது போல,1927க்குள் சட்டசபை நுழைவு வேலையிலும் இளைஞர்களுக்குச் சோர்வு தட்டிற்று. இதன் எதிரொலிகளை நாம் பேரவைக்குள்ளும் வெளியிலும் காண்கிறோம். உள்ளே இது, "குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா?” என்ற குறிக்கோள் நோக்கிய போராட்டமாயமைந்தது; வெளியே 1857 புரட்சி மரபில் வந்த இளைஞரின் வெறித்த புரட்சிச் செயல் மரபாய் வளர்ந்தது. இரண்டும் நாட்டை மீண்டும் சட்ட மறுப்புப் போன்ற புதிய இயக்கங்களுக்கு இழுத்துச் சென்றன.
ய
இந்திய அரசியல் நெருக்கடி மரபைத் தீர்ப்பதற்கு மாநிலச் சட்டசபையில் 1924லேயே பண்டித மோத்திலால் நேரு ஒரு திட்டம் வகுத்திருந்தார். அதில் அவர் எல்லாக்கட்சித் தலைவர்களும் அடங்கிய ஒரு வட்டமேசை மாநாடு கூட்டும்படியும், அதன் அறிவுரைகளுடன் கூடிய ஒரு முழு நிறை
பாறுப்பாட்சித் திட்டம் வகுக்கும்படியும் அரசியலாரைக் கோரி இருந்தார். 1926இல் பேரவைத் தலைவர் இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரசியலார் 1919 சட்டத்தில் குறிப்பிட்டபடி பத்தாண்டுகளுக்கொரு முறை சீர்திருத்தப் பங்கீடு செய்யும் எண்ணத்துடன், 1927ல் ஒரு குழுவை நிறுவினர். இதில் தலைவராயிருந்தவர் சைமன். எனவே, இது சைமன் குழு என்று வழங்கப்பட்டது. இதில் இந்தியர் எவரும் இடம் பெறவில்லை. பேரவை இதைக் கண்டித்ததுடன், இக்குழுவினருடன் ஒத்துழைக்கவும் மறுத்தது. சென்னை நேர்மைக் கட் சியும் ஒரு முஸ்லிம் தலைவர்களும் தவிர, மற்ற எல்லாக் கட்சிகளும் இவ்வெதிர்ப்பில் கலந்து கொண்டன.
சில
1928ல் சைமன் குழுவினரின் சுற்றுப்பயணத்தின் போது இந்தியா எங்கும் கடைகள் அடைக்கப்பட்டன; கண்டனக் கூட்டங்கள் பெருகின.சென்னையில் இந்நடவடிக்கையின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. லாகூரில் எதிர்ப்பு ஊர்வலத்தில் நடைபெற்ற அடிதடிகளுக்கு ஆளாகிப் பெருந்தலைவர் லாலா லஜபதிராய் உயிர் நீத்தார். தலைவரை இழந்து சீற்றங் கொண்ட இளைஞர்கள் காவல் துறைத்தலைவர் சாண்டர்ஸ் என்பவரைச் சுட்டுக் கொன்றார்கள். அடக்கு