இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு
193
முறைகளுக்கு இது மீண்டும் அழைப்பாயிற்று. கிளர்ச்சிக்கு ஒத்துணர்வு தெரிவித்துத் தென்னிந்தியத் தொடர் ஊர்தித் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர்.
1928இல் டெல்லியில் நாட்டின் எல்லாக் கட்சியினரும் சேர்ந்து ஒரு மாநாடு கூட்டினர். சைமன் குழுவை எல்லாரும் கண்டித்து, அதன் அறிக்கையை ஏற்க மறுப்பதென்று முடிவு செய்தனர். அத்துடன் இந்தியாவில் ஒப்புக்கொள்ளப்படத்தக்க வேறோர் அரசியல் திட்டத்தையும் அமைக்க ஏற்பாடு செய்தனர். பண்டித மோத்திலால் நேருவைத் தலைவராகக் கொண்ட ஒரு குழு இதற்காக அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையே 'நேரு குழு அறிக்கை' எனப் பெயர் பெற்றது. அது இந்தியாவுக்கு உடனடியாகக் குடியேற்ற நாட்டுரிமை வழங்கவேண்டுமென்று கோரிற்று.பேரவை இவ்வறிக்கையையும் இம்முடிபையும் ஏற்றது.
குடியேற்ற நாட்டுரிமை பிரிட்டிஷ் பேரரசுக்குட்பட்ட ஓர் உறுப்பின் நிலையேயாகும். 1918ல் பேரவை இதையே தன் அரசியல் குறிக்கோளாகக் கொண்டு, பிரிட்டிஷார் அவ்வுறுதி அளிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தது. பத்தாண்டுகள் சென்ற பின்னும் பிரிட்டிஷார் அதே நிலையில் நின்று நகராதது பேரவையில் எல்லாருக்குமே மனக்கசப்புத் தந்தது. இந்நியிைல் அக்குடியேற்ற நாட்டுரிமையையே இன்னும் பேரவையின் இலக்காகக் கொள்வது இளைஞர் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. 1927லிருந்தே இக்குறிக்கோளை எதிர்த்து முழு நிறை விடுதலைக் குறிக்கோளுக்காகப் பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், எஸ். சீனிவாச அய்யங்கார், ஜயப்பிரகாச நாராயணா ஆகியவர்கள் கிளர்ச்சி செய்தனர். இக்கிளர்ச்சி பேரவையில் ஒரு புதுவகையான பிளவைக் கொண்டு வந்தது. தீவிரவாதி, மிதவாதி என்ற பழைய பெயர்களுக்குப் பதில் இக்கட்சிகள் மேனாட்டு அரசியல் மன்றத்தின் மொழியில் ‘வலசாரி, இடசாரி' எனப் பெயர் பெற்றன. மாறுதல் வேண்டாத கட்சி வலசாரி என்றும், மாறுதல் வேண்டிய கட்சி இடசாரி என்றும் கூறப்பட்டன.
சட்டசபையை ஆதரித்தவர்களைக் கொண்டு R.ஆர்.தாஸ் முன்பு தன்னாட்சிக் கட்சி அமைத்தது போல, முழு நிறை விடுதலைக் குறிக்கோளைக் கொண்டு எஸ். சீனிவாச அய்யங்கார்