பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

புதிய போராட்டம்: சட்ட மறுப்பு இயக்கம்

195

1929 பேரவையின் தீர்மானப்படி முழு விடுதலைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் சின்னமாக ஆண்டுதோறும் 1930 முதல் ஜனவரி 26-ஆந் தேதி விடுதலை நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய ஆட்சி முதல்வரான இர்வின் என்பவருடன் அரசியல் முட்டுக்கட்டை பற்றிப் பல தடவை பேசிய பின் காந்தியடிகள் போராட்டத்தைத் தொடங்க ஆயத்தமானார் பிப்பிரவரி 16-ஆம் தேதி சபர்மதியில் கூடிய பேரவைக் கூட்டம் அவருக்கு உரிமையவிறித்தது. நாடெங்கும் இவ்வறப் போராட்டம் பற்றிய பரபரப்பு ஏற்பட்டது. மார்ச்சு 12-ஆந் தேதி காந்தியடிகள் உப்புச் சட்டத்தை மீறுவதற்காகக்த தண்டிக் கடற்கரைக்குத் தம் தோழர்களுடன் கால்நடையாகப் பயணம் தொடங்கினார். இரண்டாவது சட்ட மறுப்புப் பேரியக்கம் தொடங்கிற்று.

உப்புச்சட்டம்,காட்டுச்சட்டம் ஆகிய இரண்டும் இத்தடவை மீறப்பட்டன. ஒத்துழையாமை இயக்கத்தை ஒரு மின்மினியாகச் சிறுக வைக்கும் அளவில் பொதுமக்கள் காந்தியடிகளின் இப்புதிய இயக்கத்தில் பேரளவாகக் கலந்து கொண்டார்கள். பேரவையின் இளைய தலைமுறையினர் தம் தந்தையர் இளமைக் கனவுகளைத் தாண்டி, ஆர்வக் கனல் வளர்த்து, அதில் குளித்தனர். பெண்டிர், முன் என்றுமில்லாத அளவு இவ்வியக்கத்தில் கலந்து கொண்டது எங்கும் கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. காந்தியடிகள் தண்டிக்குப் புறப்படும்போது, திருமமி சரோஜினி தலைமையில் பெண்டிர் திரண்டு, அவருக்குக் குருதி நிறக் குங்குமமிட்டு, நல்வாழ்த்துக் கூறினர். தண்டியில் ஏற்றிய தீபம் மாநிலமெங்கும் அண்ணாமலைத் தீபமாய் விளங்கிற்று.

பிரிட்டிஷ் ஆதிக்கக் குழு ஒத்துழையாமையை மதித்த அளவுகூட இப்போராட்டத்தைத் தொடக்கத்தில் பொருட் படுத்தாமலிருந்தது.தண்டி அவர்கள் அசட்டை மனப்பான்மையைத் தட்டி எழுப்பிற்று. அவர்கள் காந்தியடிகளைத் தடைசெய்யவோ, சிறைப்படுத்தவோ துணியவில்லை. ஆனால், மற்ற இடங்களில் அனுதாபத்துடன் சட்டமறுப்பு நடத்தியவர்களை ஒருவர் பின்