பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




196

அப்பாத்துரையம் - 12

ஒருவராகச் சிறைப்பிடித்துத் தண்டித்தார்கள். ஏப்பிரல் 6-ந் தேதி காந்தியடிகள் தண்டிக் கடற்கரை சேர்ந்து, உப்புச் சட்டம் மீறினார். அதற்குள் எங்கும் நிலைமை கட்டுக்கடங்காததாகி வந்தது. அவசரப் பாதுகாப்புச் சட்டங்களும், அவசரச் சட்டங்களும் புதுப்பிக்கப்பட்டன; அல்லது புதியனவாக உண்டு பண்ணப்பட்டன.

சென்னையிலும் பெஷாவரிலும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றன. மே மாதத்துக்குள் அறுநூற்றுவருக்கு மேற்பட்ட தொண்டர் சிறைப்பட்டனர். துப்பாக்கிப் பிரயோகத்தால் 115 பேர் உயிரிழந்தனர். 420 பேருக்கு மேற்பட்டவர் காயமடைந்தனர்.

மே 5-ஆந் தேதியன்று அரசாங்கம் வேறு வழியின்றிக் காந்தியடிகளைச் சிறைப்படுத்திற்று. இதனாலாவது இயக்கம் தகரலாம் என்று அரசாங்கத்தார் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், பேரவையின் செயற்குழுகூடிப் போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்திற்று. தார்சனா, வேதாரணியம் என்னும் டங்களிலும் உப்புப் போர் தொடங்கப்பட்டது.வேதாரணியம் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியாரின் அறப்போர்க்கள- மாயிற்று. வயது சென்ற முதுபெருங்கிழவர் தயாப்ஜி, கவிஞர் சரோஜினி நாயுடு முதலிய எண்ணற்ற தலைவர்கள் காந்தியடிகளினிடமாகப் போராட்டத் தலைமை வகித்துச் சிறை சென்றனர். ஷோலாப்பூரில் படைத்துறைச் சட்ட நடைமுறை எடுக்கப்பட்டது. அத்துடன் அவ்வூர்ப் பொதுக்கூட்டத்தின்மீது ஆறு தடவை துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.

போராட்டம் மிகவும் மும்முரமாயிற்று. பிரிட்டிஷ் ஆட்சிக் குழு வெறி கொண்டெழுந்தது. தன் அரசியல் போராட்டத்தின் கடைசித் துருப்புகள் வரை எடுத்து அது பேரவை மீது எறியத் தொடங்கிற்று. ஜூன் 6-ஆந் தேதி பேரவைக் குழுக்களே சட்ட விரோதமாக்கப்பட்டன. அம்மாத இறுதியில் பேரவையின் முதுபேரறிஞரான பண்டித மோத்திலால் நேரு சிறைப்பட்டார். அச்சு அவசரச் சட்டங்கள் மூலம் பத்திரிகைகளுக்குப் பிணையம் கோரப்பட்டது. கோரிய பிணையமும் பழைய பிணையமுமாகப் பத்திரிகைகளிடமிருந்து அவ்வாண்டில், 2,40,000 ரூபாய் பறிக்கப்பட்டது. பிணையம் கொடுக்க மறுத்த 9 பத்திரிகைகளை நிறுத்த வேண்டி வந்தது.