பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

197

பம்பாயும் சென்னையும் சட்ட மறுப்பு இயக்கத்தில் முன்னணியில் நின்றன. கண் மூடித்தனமான தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவைகளுக்குப் பொதுமக்கள் ஆளானார்கள். இயக்கத்தில் தொண்டாற்றிய பெண்களும் பேரவதிக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஜூலை 31ல் மிகப் பெருந் தலைவர் பலரும் பெண் தொண்டர் பலரும் கைதிகளாயினர்.சென்னையில் அடிபட்டவர்களுள் கனம் பேடன் என்ற ஒரு வெள்ளைக் கிறிஸ்தவ சமய குருவும் இருந்தார். டிஸம்பர் 31-ஆந் தேதி வீர சுபாஷ் சந்திர போஸ் ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகித்துத் தடியடித் தாக்குதலுக்கு ஆளாயினார். தொண்டர்களைச் சுட மறுத்ததற்காக ஒரு கார்வாலிப் பட்டாளத்தார் அனைவரும் 10 முதல் 14ஆண்டு வரை கடுஞ்சிறைத் தண்டனை வழங்கப்பட்டனர். 1931 ஜனவரி 21ல் தடியடிகளால் சாய்ந்த பெண்களைக் காவலர் பழியுணர்ச்சியுடன் மிதித்துத் துவைத்துக் கொன்றனர் என்பது தெரிகிறது.

வட்டமேஜை மாநாடுகள்

மக்கள்

கொடுமைகள் வெற்றி தரமாட்டா; வெறுப்பைத்தான் பெருக்கும்', என்பதனைப் பிரிட்டிஷார் கூட அறிய நீண்ட நாளாகவில்லை. பிரிட்டிஷாரிடம் நம்பிக்கை கொண்டிருந்த மிதவாதிகளைக்கூட இவ்வடக்கு முறையின் கொடுமையும் அழிவும் கிலி கொள்ளச் செய்தன. அவர்களில் தலைசிறந்த தலைவர்களான சாப்புரூ, ஜெயக்கர் ஆகிய இருவரும் ஆட்சி முதல்வருக்கும் பேரவை இயக்கத் தலைவருக்குமிடையே தூதுவராய் நடந்து சமரஸப் பேச்சைத் தொடங்கினர். இதன் பயனாக 1931 ஜனவரி 26-ஆந் தேதி காந்தியடிகளும் தலைவர் பலரும் விடுவிக்கப்பட்டனர்.மார்ச்சு 5-ஆந் தேதி காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி பலாத்காரச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டவர் தவிர, மற்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், அவரசச் சட்டங்களைப் பின்வாங்கிக் கொள்ளவும், உப்பளங்களை அடுத்த கடலோர மாவட்டங்களில் உப்பெடுக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்கவும் ஆட்சியாளர் ஒப்புக்கொண்டனர். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கு கொள்ளப் பேரவையும் ஒத்துக் கொண்டது.