பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

அப்பாத்துரையம் - 12

வட்டமேசை மாநாடு கூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை எல்லாச் சட்டப் பேரவை 1928-ஆம் ஆண்டிலேயே தெரிவித் திருந்தது. 1929இல் ஆட்சி முதல்வர் செய்த அறிவிப்பில் அவர் இதனை ஏற்றுக்கொண்டிருந்தார். இதன்படி முதல் வட்டமேசை மாநாடு 1930 நவம்பர் 30-ஆந் தேதி கூட்டப் பெற்றது. பேரவை அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், அதன் பிரதிநிதிகள் அதில் கலக்கவில்லை. ஆயினும், இந்திய மன்னர் நாடுகளிலிருந்து 16 பேரும், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சென்னை நேர்மைக் கட்சியும், மிதவாதக் கட்சியும், தனிப்பட்ட வரும் அடங்கிய 57 பேரும், பிரிட்டனின் முக்கிய அரசியற் கட்சிகளின் சார்பில் 13 பேரும் ஆக 86 பிரதிநிதிகள் வட்ட மேசையைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். விவாதங்களில் பொதுவாகக் கூட்டுறவு முறை ஆட்சி ஒத்துக்கொள்ளப் பட்டது. பாதுகாப்பும் வெளி நாட்டுறவும் மாநில நடு அரசியலுக்குரியன என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும், பேரவைப் பிரதிநிதிகள் இல்லாத முடிவுகள் வலிமையுடையவை அல்ல என்று பிரிட்டிஷ் பிரதிநிதிகள் கருதினார்கள். இதன் பயனாகவே முதல் வட்டமேசை மாநாடு 1931 ஜனவரி 19-ஆந் தேதியன்று ஒத்திப் போடப்பட்டு, இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்குள் பேரவைப் பிரதிநிதிகளை அனுப்ப உதவும்படி காந்தி- இர்வின் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாவது வட்டமேசை மாநாடு 1931, செப்டெம்பர், 7ல் கூடிற்று, பேரவையின் தனிப் பிரதிநிதியாகக் காந்தியடிகளும் அவருக்கு உதவியாகத் திருமதி சரோஜினி நாயுடு முதலிய தோழரும் சென்றிருந்தனர். பேரவை கலக்குமா கலவாதா என்பது உறுதியாவதற்கு முன்பே இந்துப் பத்திரிகையின் சார்பில் சென்றிருந்த அதன் ஆசிரியர் திரு. ஏ. அரங்கசாமி ஐயங்கார், காந்தியடிகள் வந்தபின் அவருடைய செயலாளராகப் பணியாற்றினார். 'பேரவை ஒரு சமூகத்தின் பிரதிநிதியன்று; முழுநாட்டின் பிரதிநிதி,' என்பது பற்றியே காந்தியடிகள் நீடித்துப் போராட வேண்டியதாயிருந்தது. அதற்கேற்ப, மாநாட்டின் ஆய்வுரைகளிலும், சமூகப் பிரதிநிதித்துவத் துறையிலேதான் நெருக்கடி ஏற்பட்டது. அது தீராமலே 1931, டிஸம்பர் 1-ஆந் தேதி மாநாட்டின் இரண்டாம் இருக்கை முடிவுற்றது. காந்தியடிகள் திரும்பிவர வேண்டியதாயிற்று.