பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

199

மூன்றாவது வட்டமேசை மாநாட்டின் கூட்டத்திலும் முதல் கூட்டத்தைப் போலவே பேரவை கலக்க முடியவில்லை. காந்தி- இர்வின் ஒப்பந்தத்தை ஆட்சிக் குழு மதித்து நடக்கவில்லை என்பதைக் கண்டு, காந்தியடிகள் வட்டமேசைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இந்தியாவில் மீண்டும் பேரவையின் போராட்டம் தொடங்கிற்று. மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் எதுவும் முடிக்க முடியாது போனதால், 1932, டிஸம்பர், 24இல் அது கலைவுற்றது. இந்தியாவுக்காக வட்டமேசை மாநாடு வகுக்க வேண்டிய அரசியல் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசாங்கமே வகுத்து, 1933 மார்ச்சில் வெளியிட்டது. இது பிரிட்டிஷ் மன்றத்தின் இரு சபைகளடங்கிய ஒரு நிறை குழுவின் ஆராய்வுக்கு விடப்பட்டு, அதன் அறிக்கையின்மேல் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சீர்திருத்தச் சட்டமாக நிறைவேற்றப் பட்டது.

வட்டமேசை மாநாட்டுக்குத் தலைவர்கள் புறப்படும் முன்பே சிறையில் நீண்ட நாளிருந்து உடல் நலிவுற்ற மோத்திலால் நேரு இயற்கை எய்தினார். பகவத் சிங்கும் அவர் தோழரும் காந்தி- இர்வின் ஒப்பந்தத்தின் போதே தூக்கிலிடப்பட்டனர். போராட்டம் காரணமாக 1930 முழுவதும் பேரவை ாதிருந்தது. 1931, டிஸம்பரில் 48- ஆம் பேரவை சர்தார் வல்லபபாய் தலைமையில் கராச்சியில் கூடிற்று. இது காந்தி- இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றது; சர்தார் பகவத் சிங்கு, ராஜகுரு, சுகதேவ் என்பவர்கள் வீரத்தைப் பாராட்டி அவர்கள் உயிர் இழக்க நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவித்தது; பர்மா பிரிவினை முயற்சிகளைக் கண்டித்தது; எல்லைப்புற மலைநாட்டு மக்களை ஆட்சியாளர் தொல்லைப்படுத்தி அடக்குவதை எதிர்த்தது. ஆனால், இப்பேரவையின் மிக முக்கியமான தீர்மானம், குடிகளின் மூலாதார உரிமைகளைப் பற்றியதே. இவையே பின்னாட்களில் தனிமனிதன் அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டுத் தனி முக்கியத்துவம் பெற்றன.

வில்லிங்டன் பெருமகனார்: அடக்குமுறையின் திருவுருவம்

இரண்டாவது வட்டமேசை மாநாடு முடியுமுன் இர்வின் பெருமகனார் ஆடசிக்காலம் முடிந்து, 1931, ஏப்பிரல், 17ல்