பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(200

அப்பாத்துரையம் - 12

வில்லிங்டன் பெருமகனார் ஆட்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ஸான் பெருமகனார் மரபில் வந்தவர். ‘அடக்குமுறையின் திருவுருவம்' என்று அவரைக் கூறலாம். அவர் ஆட்சியில் பேரவை இயக்கமும் மக்கள் உரிமைகளும் உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று.

காந்தியடிகள் இலண்டனிலிருந்து திரும்பு முன்னரே ஐக்கிய மாகாணத்தில் குடியானவர் பெருந்துயருக்காளாயிருந்தனர். அவர்கள் நடத்திவந்த வரி கொடா இயக்கத்தில் கலக்கச் சென்ற பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் ஜனாப் ஷேர்வானிக்கும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. அவர்கள் தடையை மீறிச் சிறைப்பட்டார்கள். எல்லைப்புற மாகாணத்தில் எல்லைப்புறக் காந்தி என்று வழங்கப்படும் கான் அப்துல் கபார்கானும் அவர் இளவல் டாக்டர் கான் சாகிபுவும் இதுபோலவே அடக்கு முறைக்காளாய்ச் சிறைப்பட்டிருந்தனர். காந்தியடிகள் ஆட்சி முதல்வருடன் தந்தியும் கடிதப் போக்குவரத்தும் தொடங்கிச் சமரஸம் பண்ண முயன்றும், வில்லிங்டன் தமது அடக்குமுறையி லிருந்து விலக இணங்கவில்லை. பேரவைக்குழு மீண்டும் சட்டமறுப்பைத் தொடங்க முடிவு செய்தது. ஆனால் 1932, ஜனவரி, 4ல் பேரவைக் குழுக்களும், பேரவையும் அது சார்ந்த நிலையங்களும் சட்ட விரோதமானவையாக்கப்பட்டன. காந்தியடிகள் உட்படத்தலைவர்களும் தொண்டர்களும் மீண்டும் சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள். இதன் பயனாக 1932,1933 ஆகிய இரண்டாண்டுகளில் கடும்போராட்டம் நீடித்தது. பேரவை இவ்வாண்டுகளில் ஒழுங்காகக் கூடவில்லை.

வட்ட மேசை மாநாட்டில் வகுப்புப் பிரச்சினை பற்றிப் பேரவையும் வகுப்புத் தலைவர்களும் யாதொரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆகவே, பிரிட்டிஷ் முதல்வர் ராம்சே மாக்டனால்டு தாமே நடுத்தீர்ப்பு வழங்கினார். சிறையிலிருந்து கொண்டே இவ்வெட்கக்கேடான நிலைமைக்கு வருத்தம் தெரிவித்துக் காந்தியடிகள் 1932, ஆகஸ்டு, 17ல் சாகும்வரை உண்ணா நோன்பிருக்கத் தொடங்கினார். நாடெங்கும் அரசியல் போராட்டங்களால் ஏற்படும் புயலைவிட, வ்வுண்ணா நோன்பால் பெருத்த புயல் எழுந்தது. ஆனால், இதன் பயன் கண் கண்டதாய் இருந்தது. மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் காந்தியடிகளின் உயிர்காக்கும் ஆர்வத்தால்