பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

.

201

கோயில்கள் திறக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களே தியாக உணர்ச்சியுடன் வகுப்புத் தீர்மானத்தைத் துறக்க முன் வந்தார்கள். இதன் பயனாக வகுப்புப் பிரதிநிதித்துவம் பற்றிய எரவாடா ஒப்பந்தம் சிறையிலேயே தலைவர்களால் உறுதி செய்யப்பட்டது. மே 8-ஆந் தேதி காந்தியடிகள் மீண்டும் ஆட்சியாளர் போக்கைக் கண்டித்து உண்ணாநோன்பிருக்கத் தொடங்கியபோது விடுதலை

செய்யப்பட்டார். அவர் வெளி வந்ததும் 6 வாரம் சட்டமறுப்பை நிறுத்தி வைத்து, நாட்டு நிலைமையை ஆராய்ந்தார்.

விட்டல்பாய் பட்டேலும், சுபாஷ் சந்திர போஸும் சட்டமறுப்பை நிறுத்தியது தவறு என்று கண்டித்தனர். ஆனால், காந்தியடிகள் சட்ட மறுப்புக்கு மக்கள் முற்றிலும் தகுதி பெறவில்லை என்று கருதினார், எனினும், அவர் தனிப்பட்டவர். சட்ட மறுப்புக்கு இணங்கினால் தமது சபர்மதி இல்லம் தமது உயர்குறிக்கோளையும் கட்டுப்பாட்டையும் காப்பாற்ற முடியாதது கண்டு, அவர் அதைத் கலைத்து அதன் உடைமை முழுவதையும் தாழ்த்தப்பட்டவர் (ஹரிஜனம்) இயக்கத்துக்கு அளித்தார்.

தனிப்பட்டவர் சட்டமறுப்பு

தனிப்பட்டவர் சட்ட மறுப்பு ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. 1933, ஆகஸ்டு, முதல் தேதி காந்தியடிகள் சிறைப்பட்டார். ஆனால், உடல் நலம் கருதி ஆகஸ்டு 23-ஆந் தேதி பூனா மருத்துவமனையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், காந்தியடிகள் முறைப்படி தம் சிறைக்காலம் முடியும் ஆண்டு, அதாவது, 1934 வரை ஹரிஜன இயக்கம் தவிர வேறு எதிலும் தலையிடாமல் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக்கொண்டார். அத்தொண்டுக்காகவே அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

இவ்வாண்டு பழைய பேரவை இயக்கத் தலைவரான டாக்டர் அன்னி பெஸண்டு அம்மையார் செப்டெம்பர் 20- ஆம் தேதியிலும், சட்டசபையின் முன்னாள் வீரத் தலைவரான விட்டல்பாய் பட்டேல் செப்டெம்பர் 22-ஆந் தேதியிலும் காலமாயினர்.