பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 12

202 ||- 1934 பேரவை இயக்கத்தில் இருபெரு மாறுதல்கள் ஏற்பட்டன; தன்னரசுக்கட்சி இதுவரை சட்டசபை வேலைகளைக் கவனித்து வந்தது. இவ்வாண்டு முழு நிறை பேரவையில் பெருங்குழு சட்டசபை நுழைவை ஆதரித்ததனால், தன்னரசுக் கட்சி தனிக்கட்சியாயிராமல், பேரவையில் முழுதும் ஒன்றுபட்டு விட்டது. ஆனால், இவ்வாண்டில் இடசாரியினர் எழுச்சி யடைந்தனர். அவர்கள் பேரவை, சமதருமக் கட்சி என்ற பெயருடன் மே 17-ஆம் தேதி பாட்னாவில் தனி மாநாடு கூட்டினார்கள். இதுவரை ஜவஹர்லாவின் வலக்கையாயிருந்த ளைஞர் ஜெயப்பிரகாச நாராயணரே அதன் கட்சித் தலைவரானார்.

காந்தியடிகளின் தாழ்த்தப்பட்டவர் தொண்டுக்கு வைதிக இந்துக்கள் எதிர்ப்பு இவ்வாண்டில் சற்று வலுத்தது.

பேரவை சில ஆண்டுகளாகக் கூட முடியாவிட்டாலும், 1932,1933 ஆகிய ஆண்டுகளில் தில்லியிலும் கல்கத்தாவிலும் பல பிரதிநிதிகள் தனிப்படக் கூடிக் காலத்திற்கேற்ற தீர்மானங்கள் செய்திருந்தார்கள். 1933, மார்ச்சு, 31-ஆந் தேதி கல்கத்தாவில் பேரவை கூட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும், அரசியலார் தடுப்பு நடைமுறைகளும் அடக்குமுறைகளும் செய்து அதை நடவாதபடி முட்டுக்கட்டையிட்டனர். 1934, செப்டெம்பர், 25ல் கூடிய பேரவைக்குழு அடுத்துவரும் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்தது. அவ்வாண்டு ராஜேந்திர பிரசாது தலைமையில் நடந்த நிறைபேரவை அதற்கான அரசியல் அரங்கக் குழு' அமைத்தது.