204
||-
அப்பாத்துரையம் - 12
பேரவையின் முத்து விழா நாளுக்குள்ளாக இந்திய மாநில மக்களின் வாழ்வில் முழு நிறைவான இன்ப மலர்ச்சியும் சரிசம உரிமை மலர்ச்சியும் ஏற்பட்டுவிடும் என்று நாம் நம்பலாம்.
காந்தியடிகளின் ஆக்கப் பண்பு
காந்தி ஊ ஊழி கடந்து காந்தியடிகளின் புகழொளி சுடரிட்டது. ஆனால், அது இந்திய அரசியல் எல்லை கடந்து, மக்கள் வாழ்வெல்லையிலும், உலக எல்லையிலும் ஒளி வீசத் தொடங்கிற்று. இந்திய எல்லையுள்ளும் அவர் காட்சி, பேரவையின் அரசியலியக்கம் கடந்து தேசீய வாழ்வில் கருத்துச் செலுத்தி, பல துணை இயக்கங்களை வளர்க்கத் தொடங்கிற்று.
ய
1918லிருந்தே காந்தியடிகள் இந்தி இயக்கத்தில் கருத்துச் செலுத்தியிருந்தார். தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்பு வதற்காக அவர் தலைமையிலேயே தென்னிந்திய இந்திப் பிரசார சங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 1920லிருந்து கதர்த் திட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. அதை நடத்துவதற்காக 1925 செப்டெம்பரில் காந்தியடிகள் தலைமையிலேயே இந்திய மாநில நூற்போர் சங்கம் நிறுவப்பட்டிருந்தது.
1934 முதல் காந்தியடிகளுக்கு அரசியல் வேலைகளிலிருந்து ஓய்வு கிட்டிற்று. அவர் மீண்டும் ஆக்கப் பணிகளைப் பெருக்கத் திட்டமிட்டார். பேரவையின் அரசியல் இயக்கத் தொடர்பு இவ்வாக்க வேலைகளுக்குக் குந்தகமாயிருக்கக் கூடும் என்று அவர் கருதினார். எனவே, அவர் பேரவையில் நான்கணா உறுப்பினர் நிலையைக்கூடத் துறந்து, ஆக்கத் துறையில் முழுதும் ஈடுபட்டார்.
இவ்வாண்டு காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கெ ஒரு முழு ஆண்டுப் பணி செய்வதென உறுதி கொண்டார். அது வகையில் சிந்தனையாளரை ஊக்குவதற்காக அவர் 'ஹரிஜன்' என்ற பத்திரிகையைத் தொடங்கியதுடன் பிர்லா, தக்கர் முதலிய பேரவைச் சார்பற்றவர்கள் ஒத்துழைப்புடன் ஹரிஜன சேவா சங்கம் ஒன்றை நிறுவினார். அத்துடன் இந்திய மாநில சிற்றூர்ச் சீரமைப்புச் சங்கம்* ஒன்றும் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கைத்தொழில் வளத்தைப் பெருக்குவதுடன் நாட்டின் பெரும்பான்மை மக்களான குடியானவர்களுக்கு வளமூட்டும்