(206
மீண்டும் சட்ட சபைப் பிரச்சினை
அப்பாத்துரையம் - 12
ஐம்பதாவது பேரவை 1936ல் இலட்சுமணபுரியில் பண்டித ஜவஹர்லால் நேருவின் தலைமையில் கூடிற்று. ஜவஹர்லால் இப்போது இரண்டாவது தடவையாகத் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். விடுதலை இயக்கப் போராட்ட மரபுப்படி மாநில அளவில் கூட்டப்பட்ட கடைசிப் பேரவை இதுவாகவே அமைந்தது. ஏனென்றால், அடுத்த பேரவைக் காலத்திற்குள் காந்தியடிகளின் புதிய சிற்றூர்ப் பேரவைத் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது. இச்சமயம் சுபாஷ் போஸ் சிறையி லிருந்தார். அவர் கைது செய்யப்பட்டதைப் பேரவை கண்டித்த துடன், முழு விடுதலை பெறும்வரை போராட்டம் நடத்துவ தன்றும், ஏகாதிபத்தியப் போர் எதிலும் கலந்து கொள்வ தில்லை என்றும் தீர்மானித்தது. இச்சமயம் அபஸீனியா மீது இத்தாலி நேர்மையற்ற முறையில் தாக்குதல் தொடங்கிப் போர் நடந்து கொண்டிருந்தது.பேரவை அபிஸீனியாவுக்கு அனுதாபம் தெரிவித்தது. நடுச்சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் பேரவைக்குப் பெருவெற்றி கிடைத்திருந்தது.பேரவை மாகாணச் சட்ட சபைத் தேர்தல்களுக்கும் தன் பிரதிநிதிகளை நிற்க வைக்க முடிவு செய்தது. வெற்றி பெற்ற பின் பதவி ஏற்பதா வேண்டாவா என்பதில் இன்னும் கருத்து வேறுபாடு இருந்ததால், அது வகையில் எத்தகைய முடிவும் செய்யப்படவில்லை. பொது மக்களோடு நேரடித் தொடர்பு வைத்துக்கொள்ள ஒரு குழு அமர்த்தப் பட்டது.
காந்தி சேவா சங்கம் தொடங்கியது. இவ்வாண்டிலேயே. இந்த ஆண்டு முதல் காந்தியடிகள் சிற்றூர்த் தொண்டி ல் இறங்கினார். அதற்கேற்ப அவரும், சேவா கிராமம் என்ற ஊரில் வாழத் தொடங்கினார். இது முதல் பேரவையும் சிற்றூர் களிலேயே நடக்கத் தொடங்கிற்று. முதல் சிற்றூர்ப் பேரவை, 1937ல் ஃவெய்ஸ்பூரில் கூடிற்று.
தமிழகத்தில் வ.உசிதம்பரனார் அரசியல் தொண்டிலிருந்து ஒருமிகத் தீவிரத் தமிழ்த் தொண்டிலும் சமூக சீர்திருத்தத் தொண்டிலுமே நாட்களைக் கழித்து வந்தார். ஆனால், பேரவையிலிருந்து விலகியும் அடிக்கடி அதற்குத் தேவைப்பட்ட போது காந்தியடிகள் வழிகாட்டி வந்தது போல அவர்