பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

(207

அவ்வப்போது தமிழகப் பேரவைக் கூட்டங்களுக்கும் வந்து இளந்தலைவர்களை ஊக்கி வந்தார். 1936ல் அவர் நீண்ட தேசத் தொண்டினிடையே விடுதலை இந்தியாவைப் பற்றிக் கனவு கண்ட வண்ணமே உயிர் நீத்தார். ஃவெய்ஸ்பூர் பேரவை அவர் மறைவுக்கும், அதே ஆண்டில் இயற்கை எய்திய டாக்டர் எம்.ஏ. அன்ஸாரி, அப்பாஸ் தயாப்ஜி ஆகியவர்கள் மறைவுக்கும் வருத்தம் தெரிவித்தது.

பர்மாப் பிரிவினையைத் தொடக்கக் காலப் பேரவை கோரியிருந்தது. பிற்காலத்தில் இது அதை எதிர்த்தது. அதன் காரணம் இப்பேரவையில் பர்மா பிரிவினையடைந்தது பற்றிய கண்டனத்தில் விளக்கப்பட்டது. 'பர்மா பிரிவினை' இந்தியர் நலங்களை நாடியோ, பர்மியர் நலங்களை நாடியோ செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன் நாடியே செய்யப்பட்டது' என்பது எடுத்துக் காட்டப்பட்டது.

தேர்தல் வெற்றிகள்: பேரவைக் கட்சியின் ஆட்சி

1937 தேர்தலில் எடுத்த எடுப்பிலேயே பேரவைக்குப் பெருவெற்றிகள் கிடைத்தன. 11 மாகாணங்களுள் 8ல் அது பெரும்பான்மைக் கட்சி ஆயிற்று. வழக்கம்போலச் சென்னை அத்தேர்தல் வகையிலும் இந்தியாவுக்கு முன்னணியில் நின்று வழி காட்டிற்று. ஃவெய்ஸ்பூர் பேரவை இவ்வெற்றியைப் பாராட்டியதுடன், பதவி ஏற்பதா, வேண்டாவா என்ற முந்திய ஆண்டுப் பிரச்சினையிலும் ஒரு முடிவு தெரிவித்தது. 'பதவி ஏற்கலாம்', என்பதற்கே பேரளவு ஆதரவு ஏற்பட்டது.அதன்படி இவ்வாண்டிலேயே பல தயக்கங்களுக்கும் தவக்கங்களுக்கு மிடையே, பேரவை பதவி ஏற்று, அமைச்சவைகளை நிறுவிற்று.

காந்தியடிகள் பதவி ஏற்பதற்கு முன் மாகாண ஆட்சித் தலைவர்களிடமிருந்து நடைமுறையாட்சியில் அவர்கள் தலையிடுவதில்லை என்ற உறுதிமொழி கோரியிருந்தார். இதுவே சில மாதத் தயக்க நிலைக்குக் காரணமாயிருந்தது. இறுதியில் சென்னை ஆட்சி முதல்வர், சென்னைச் சட்டசபைப் பேரவைக் கட்சித் தலைவரான சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியாரிடம் வ்வுறுதி மொழி தந்தார். சென்னையில் ராஜகோபாலசாரி யாரின் அமைச்சவை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற